அபிராமி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அபிராமி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Added : செப் 15, 2020
Share
 அபிராமி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

திண்டுக்கல் : திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலுக்கு மர்ம நபர் விடுத்த வெடிகுண்டு மிரட்டலால் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் 300 ஆண்டுகள் பழைமையானஹிந்து கடவுள்களான அபிராமி அம்மன்,காளகதீஸ்வரர் கோயில் உள்ளது.நேற்று காலை 10:40 மணிக்கு சென்னை டி.ஜி.பி., அலுவல காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசிய மர்ம நபர், இக்கோயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறி அழைப்பை துண்டித்தார். உடனே வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் குழுவுடன் போலீசார் மோப்ப நாய் மேக்ஸூடன் இணைந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் எதுவும் இல்லை என உறுதியானது.
மிரட்டல் நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் குண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X