அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் தற்கொலைக்கு திமுக தான் காரணம்: முதல்வர்

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (42)
Share
Advertisement
நீட்தேர்வு, திமுக,ஸ்டாலின்,  முதல்வர் இபிஎஸ், காங்கிரஸ், மாணவர்கள், தற்கொலை, எடப்பாடிபழனிசாமி, எடப்பாடிகே.பழனிசாமி, திமுகதலைவர்ஸ்டாலின், மு.க.ஸ்டாலின்,

சென்னை: நீட் தேர்வு காரணமாக 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு தி.மு.க., தான் காரணம் என சட்டசபையில் முதல்வர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

நீட் தேர்வு தொடர்பாக சட்டசபையில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசுகையில், 'நீட்' தேர்வுக்கு எதிராக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த தீர்மானத்திற்கு இதுவரை ஒப்புதல் வாங்கவில்லை. தற்போது நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். கருணாநிதி, முதல்வராக இருந்த வரை , தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படவில்லை எனக்கூறினார்.


latest tamil news




இதன் பின்னர் முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது: காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்த போது தான் நீட் தேர்வுக்கான சட்டம் கொண்டு வரப்பட்டது. 2010ல் கொண்டு வரப்பட்ட சட்டம் காரணமாக, தற்போது நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு கொண்டு வரப்பட்ட போது, காங்., கூட்டணியில் இருந்தது யார்? தேர்வை அறிமுகப்படுத்தியது யார் என்பதை நாடே அறியும்.
நீட் தேர்வில் 13 மாணவர்களின் தற்கொலைக்கு திமுக தான் காரணம். கூட்டணியில் இருந்து திமுக நாட்டை குட்டி சுவராக்கியுள்ளது இதனால் தான் 13 பேர் மரணமடைந்துள்ளனர். நீட் எப்போது யார் ஆட்சியில் வந்தது. யார் அறிமுகப்படுத்தினார்கள். பதில் சொல்லுங்கள். இவ்வாறு முதல்வர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
16-செப்-202008:04:00 IST Report Abuse
Sampath Kumar ஏன் சார் நீக்க அவனுக்களி சொல்லுங்க அவனுக உங்களை சொல்லட்டும் ஆக உண்மை யார்க்கும் புரியாமல் போகட்டும் அதனால் உங்க பிளான் மக்கள் அறிவார்கள் அதை தெரிதலில் காட்டுவார்கள் அப்புறம் புரியும் உங்களுக்கு
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
15-செப்-202020:36:08 IST Report Abuse
Krishnamurthy Venkatesan "மாணவர்கள் தற்கொலைக்கு திமுக தான் காரணம்: முதல்வர்" - தற்கொலைக்கு திமுக தான் காரணம் என்றால், அவர்கள் மீது வழக்கு தொடரலாமே. நீட் தேர்வை அறிமுகப்படுத்தியதில் திமுக வின் பங்கு உண்டு என்றுதான் பொருள்.
Rate this:
Cancel
Raj - Chennai,இந்தியா
15-செப்-202019:50:00 IST Report Abuse
Raj ரெண்டு பெரும் காரணம்னு ஒத்துக்கிட்டாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X