'கணக்கு இல்லை... அதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் இறக்கவில்லையா?' ராகுல் கேள்வி

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement

புதுடில்லி: நேற்று (செப்., 14) நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், கொரோனா ஊரடங்கின் போது எவ்வளவு புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்தார்கள் என்பதை கணக்கிடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இது, கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.



latest tamil news



கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல் 68 நாட்களுக்காக மத்திய அரசு ஊரடங்கு அறிவித்திருந்தது. தேசிய அளவிலான இந்த ஊரடங்கின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும் தங்கள் வீடு திரும்ப பல்வேறு வழிகளை கையாண்டனர். இதில், பல நூறு கி.மீ., தொலைவிற்கு நடந்தே சென்றவர்களில் பலரும் வழியில் பல்வேறு காரணங்களால் பலியாகினர்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் நேற்று, இந்தியன் யூனியன் முஸ்லீக் லீக்கின் தமிழக எம்.பி.,யான கே.நவாஸ்கனி உள்ளிட்ட மூவர், ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்கள் தங்கள் வீடுதிரும்பும் போது பலியான விவரங்கள் அளிக்கும்படி கேட்டனர். இதற்கு எழுத்துபூர்வமான பதிலில், மத்திய தொழிலாளர் துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்குவார், 'இந்த விவரங்களை அரசு சேகரிக்கவில்லை' என, தெரிவித்துள்ளார்.


latest tamil news







latest tamil news



காங்., தலைவர் சோனியாவின், 'ஹெல்த் செக்-அப்' காரணமாக, வெளிநாட்டில் உள்ள ராகுல் தன் டுவிட்டர் பக்கத்தில், 'லாக்டவுன் காலக்கட்டத்தில் எவ்வளவு புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்தார்கள் என்ற கணக்கு மோடி அரசிடம் இல்லை. எத்தனை பேர் வேலையிழந்தனர் என்ற கணக்கும் இல்லை எனில், நீங்கள் கணக்கிடவில்லை எனில், ஒருவரும் மரணமடையவில்லை அப்படித்தானே? உயிர்கள் பறிபோனதை பற்றி அரசுக்கு அக்கறை இல்லை என்பதுதான் இதில் மிகவும் துயரார்ந்தது. அவர்கள் மரணித்ததை உலகமே பார்த்தது. ஆனால் மோடி அரசுக்கு தெரியவில்லை' என, ஹிந்தியில் எழுதியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
15-செப்-202021:28:01 IST Report Abuse
a natanasabapathy கணக்கு கொடுத்தால் lotus கணக்கிலிருந்து குடும்பத்துக்கு ஒரு கோடி கொடுப்பீர்களா இல்லை நாக்கை மட்டும் வழிப்பீர்களா
Rate this:
Cancel
காஷ்மீர் கவுல் பிராமணன். பப்பு உன்தங்கை உபி தொழிலாளர்களுக்கு பஸ் விட்ட மாதிரி நீ ஏதாவது இழப்பீடு கொடுக்க போகிறாயா?
Rate this:
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
15-செப்-202018:34:57 IST Report Abuse
srinivasan இவரோட தாத்தா பைரோஸ் கான் உடைய மாமனார் நேரு சீனாவிற்கு 45 000 சதுர கி. மீ ..... என்ன சொல்கிறார் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X