பொது செய்தி

இந்தியா

மத்திய பிரதேசத்தில் விவசாய உபகரணம் வாங்கியதில் முறைகேடு

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
ChineseMachines, MadhyaPradesh, Farmers, மத்தியபிரதேசம், விவசாய உபகரணங்கள், உழவு இயந்திரம்

போபால்: பண்ணை இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தில் உள்ள விவசாயிகளுக்கு தரமற்ற சீன மின் உழவு வழங்கப்பட்டதாகவும், அதில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாகவும், வேளாண் நிர்வாக இயக்குனர் ஸ்ரீகாந்த் பனோத் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு அறிக்கை அளித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் பழங்குடியினர் அதிகம் வாழும் 11 மாவட்டங்களில் கடந்த 2017 முதல் 2019 வரை, கிரிஷி யந்திரிகாரன் யோஜ்னா என்னும் பண்ணை இயந்திரமயமாக்கல் திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு பவர் டில்லர்ஸ் என்னும் மினி டிராக்டர்கள் வழங்கப்பட்டன. இந்த மினி டிராக்டர்கள் மூலம் உழுதல், விதைகள் விதைத்தல், உரங்கள் தெளிப்பு, பயிர்கள் அறுவடை போன்றவைகள் செய்யலாம். சீன மின் உழவு இயந்திரமான இந்த மினி டிராக்டர்கள் வாங்கியதில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்துள்ளதாக வேளாண் நிர்வாக இயக்குனர் ஸ்ரீகாந்த் பனோத் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு அறிக்கை அளித்துள்ளது.


latest tamil news


அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எந்தவொரு டெண்டர் இல்லாமல் பவர் டில்லர்களை ஒரு நிறுவனம் வாங்கியுள்ளது. விற்பனையாளர்கள், விவசாயிகளின் போலி ஒப்புதல் சான்றிதழ்களை வழங்கி, அவர்களின் கணக்குகளில் நிதி வரவு வைக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளின் கைகளில் சிறந்த தொழில்நுட்பத்துடன் பண்ணை உற்பத்தித்திறனை உயர்த்துவதற்காக மத்திய பிரதேசத்தில் இந்த திட்டம் அமைக்கப்பட்டது. ஆனால் நேரடி பயனாளிகள் பரிமாற்றம் திட்டத்தை மீறி விவசாயிகளுக்கு மலிவான, தரமற்ற சீன மின் உழவு வழங்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ம.பி., தோட்டக்கலைத்துறை அமைச்சர் பாரத் குஷ்வாஹா கூறுகையில், ‛இது தொடர்பான அறிக்கை எங்களுக்கு கிடைத்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்,' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
15-செப்-202013:36:35 IST Report Abuse
Ramesh Sargam உஷார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X