தமிழ்நாடு

பி.எம்., கிசான் திட்டத்தில் முறைகேடு : 9 பேர் கைது

Added : செப் 15, 2020
Share
Advertisement

விழுப்புரம் : பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் உதவி அலுவலர்கள் இருவர் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் உட்பட 9 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் பி.எம்., கிசான் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடர்பான விசாரணையில், கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 70 ஆயிரம் பேர் வரை திட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.அதில் 42 ஆயிரம் பேர் விவசாயிகள் அல்லாதோர் என்பதும்; 8,000 பேர் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தோர் என மொத்தம் 50 ஆயிரம் பேர் போலியாக சேர்க்கப்பட்டு உதவித்தொகையை பெற்றிருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து, பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முறைகேடு தொடர்பாக வல்லம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணிபுரியும் உதவி வேளாண் அலுவலர்கள் இருவர் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் உட்பட 15 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.இந்த விசாரணையைத் தொடர்ந்து, உதவி வேளாண் அலுவலர்கள் சாவித்திரி, 34; ஆஷா, 38; மற்றும் ஒப்பந்த ஊழியர்களான வல்லம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், 32; பாரி, 31; பிரகாஷ், 34; புஷ்பராஜ், 30; வெங்கடேசன், 34; மாயவன், 33; பழனிகுமார், 36; ஆகிய 9 பேரை கைது செய்து, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வேடம்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
6 பேர் 'டிஸ்மிஸ்'
முகையூர் வட்டாரத்தில் பயிர் அறுவடை பரிசோதகர்களான ஒப்பந்த ஊழியர்கள் ராஜ்குமார், வீரன், அண்ணாமலை, வேல்முருகன், கிருபானந்தம், சுஜிதா ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டது வேளாண் துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பான அறிக்கையை முகையூர் வேளாண் உதவி இயக்குநர் கனகலிங்கம், கலெக்டரிடம் சமர்ப்பித்தார். அதனடிப்படையில், ராஜ்குமார் உட்பட 6 பேரையும் பணி நீக்கம் செய்து கலெக்டர் அண்ணா துரை நேற்று உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X