சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மர வியாபாரி கொலை வழக்கில் ஒருவர் கைது

Added : செப் 15, 2020
Share
Advertisement
 மர வியாபாரி கொலை  வழக்கில் ஒருவர் கைது

பண்ருட்டி : பண்ருட்டி அருகே மர வியாபாரி கொலை வழக்கில் ஒருவரை காடாம்புலியூர் போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நீலகண்டன்,51; மர வியாபாரி. இவர் கடந்த 3 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 9 ம்தேதி மதுகுடிக்கும் போது இவருக்கும் அதே ஊர் துண்டுகாடு பகுதியை சேர்ந்த சிவக்குமார்,35; தகராறு ஏற்பட்டது.இதில் இருவரும் தாக்கி கொண்டனர். இதனையறிந்த சிவக்குமாரின் தம்பி சசிகுமார் 25, கடந்த 10 ம்தேதி நீலகண்டனிடம் சென்று எனது அண்ணனை ஏன் அடித்தீர்கள் என கேட்டு நீலகண்டனை பலமாக தாக்கினார்.
இதில் படுகாயமடைந்த நீலகண்டன் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கடந்த 12 ம்தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிந்து விசாரித்தனர். நேற்று முன்தினம் கொலை வழக்காக மாற்றி சசிகுமாரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X