சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவன் கைது

Added : செப் 15, 2020
Share
Advertisement

திட்டக்குடி : திட்டக்குடியில் மனைவியை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில், கணவரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலுார் மாவட்டம் குன்னம் தாலுகா வ.கீரனுாரைச்சேர்ந்தவர் ராஜமாணிக்கம்,47. வி.சி.கட்சியின் பெரம்பலுார் மாவட்ட செயலர். இவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் கடலுார் மாவட்டம், திட்டக்குடி பெரியார் நகரில் வசித்து வருகின்றார். . கடந்த ஆகஸ்டு 25ம் தேதி ராஜமாணிக்கத்தின் மனைவி கற்பகம்,28, எலிபேஸ்ட் சாப்பிட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செப். 6ம் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்து இறந்த கற்பகத்தின் தாய் கனகம் கொடுத்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில் கற்பகம் இறப்புக்கு கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்னை காரணம் எனத் தெரிந்தது. இதையடுத்து திட்டக்குடி போலீசார், கற்பகத்தை தற்கொலைக்கு துாண்டியதாக ராஜமாணிக்கத்தை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X