சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மயானத்திற்கு இடம் கேட்டு சடலத்துடன் சாலை மறியல்

Added : செப் 15, 2020
Share
Advertisement
 மயானத்திற்கு இடம் கேட்டு சடலத்துடன் சாலை மறியல்

திட்டக்குடி : திட்டக்குடி அருகே மயானத்திற்கு இடம் ஒதுக்க கோரி பொதுமக்கள் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த கூடலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள், இவரது தந்தை கனகசபை,80. இவர் நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் இறந்தார். நேற்று அவரது உடலை அடக்கம் செய்ய, தொளார் கைகாட்டி பஸ்நிறுத்தம் அருகிலுள்ள பகுதியில் குழி தோண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதற்கு தனிநபர் எதிர்ப்பு தெரிவித்து புகார் அளித்தார். அதன்பேரில் ஆவினங்குடி போலீசார் அடக்கம் செய்வதை தடுத்து நிறுத்தியதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சடலத்தோடு விருத்தாசலம்-திட்டக்குடி சாலையில் மதியம் 2.40 மணிக்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேல், டி.எஸ்.பி., வெங்கடேசன் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை எடுத்து சாலையோரமாக வைக்க முயற்சித்தபோது, பாடையில் இருந்த சடலம் தவறி விழுந்தது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும், போலீசாருக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து பேச்சுவார்த்தையில், கூடலுார் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த மக்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பஸ்நிறுத்தம் அருகிலுள்ள பகுதியை மயானமாக பயன்படுத்தி வருகின்றனர். மாற்று இடம் வழங்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கிடப்பில் உள்ளது. இதனால் மயானத்திற்கு மாற்று இடம் வழங்கப்படும் வரை தற்போதுள்ள இடத்திலேயே உடல் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, 3.10 மணிக்கு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து வழக்கமான இடத்திலேயே கனகசபையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் விருத்தாசலம்-திட்டக்குடி சாலையில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X