சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் விரோதத்தால் இறந்தவர் உடலை தகனம் செய்யவிடாமல் விரட்டியடிப்பு

Added : செப் 15, 2020
Share
Advertisement
 தேர்தல் விரோதத்தால் இறந்தவர் உடலை  தகனம் செய்யவிடாமல் விரட்டியடிப்பு


விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக, இறந்தவர் உடலை தகனம் செய்ய வந்தவர்களை பயங்கர ஆயுதங்களுடன் தாக்க வந்ததால் போலீஸ் பாதுகாப்புடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

கடலுார் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி மனைவி தனலட்சுமி. அதே பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜ் மனைவி கனிமொழி. இருவரும் ஊராட்சி தேர்தலில் போட்டியிட்டனர். தனலட்சுமி தேர்தலில் வெற்றி பெற்றார். இதனால், அய்யாசாமி, வரதராஜ் தரப்பினரிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அய்யாசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நேற்று முன்தினம் புதிய காலனியைச் சேர்ந்த கோவில் பூசாரியான சேகர் உடல்நலக்குறைவால் இறந்தார். நேற்று மாலை 5:00 மணியளவில், அவரது உடலை தகனம் செய்ய பழைய காலனி வழியாக சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த, வரதராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயங்கர ஆயுதங்களுடன் இறுதி சடங்கு செய்ய வந்தவர்களை தாக்க முயன்றனர்.இதனால், உடலை தகனம் செய்யாமல் அங்கேயே போட்டுவிட்டு அனைவரும் தப்பியோடினர்.

தகவலறிந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உடலை தகனம் செய்வதற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதாக, உறுதியளித்தார். அதன்பேரில், 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன், இரவு 8:00 மணியளவில், உடல் தகனம் செய்யப்பட்டது.பயன்தராமல் போனசமாதான கூட்டம்தேர்தல் முன்விரோதம் காரணமாக கடந்த 3ம் தேதி சப் கலெக்டர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது.

அதில், 110 விதியின் கீழ், சப் கலெக்டர் பிரவீன்குமார் முன்னிலையில், இருதரப்பினரிடையே சமாதானம் செய்து வைக்கப்பட்டது. ஆனால், சமாதான கூட்டம் நடந்த 10 நாட்களில் இச்சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X