சீனாவின் கொரோனா தடுப்பூசி; நவம்பரில் பயன்பாட்டுக்கு வருகிறது

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

பீஜிங்: 'சீனா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி வரும் நவ., மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்' என, சீனாவின் நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.



latest tamil news



சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவிய கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் சுமார் 2.9 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்துக்கு அதிகமானோர் பலியாகி உள்ளனர். 'கொரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்தில்தான் உருவாக்கப்பட்டது' என, சீனாவைச் சேர்ந்த நுண்ணுயிர் ஆராய்ச்சியாளர் லி மெங் சமீபத்தில் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news



இந்நிலையில், சீன நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளதாவது:

சீனாவின் தேசிய மருத்துவ நிறுவனமான சினோபார்ம் தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்துகள் பல்வேறு கட்ட மருத்துவப் பரிசோதனைகளை வெற்றிகரமாகக் கடந்துள்ளது. மருத்துவப் பரிசோதனைகளின் இறுதிக் கட்டத்தில் சீனாவில் நான்கு கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் குறைந்தது மூன்று தடுப்பூசிகள், ஏற்கெனவே ஜூலை மாதம் தொடங்கப்பட்ட அவசரகாலப் பயன்பாட்டுத் திட்டத்தின் கீழ் முதலில் அத்தியாவசியத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன.
இந்த நிலையில் மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனைகள் நடந்து வருகின்றன. இதைத் தொடர்ந்து நவ., மாதம் கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வருகின்றன.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-செப்-202020:05:58 IST Report Abuse
தமிழ் கிறுக்கன் சீனாவின் தடுப்பூசி அவர்கள் நாட்டில் பயன்பாட்டிற்கு வந்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டது...இது உலகதிற்காக அவர்கள் செய்யும் ஏமாற்று வேலை.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
15-செப்-202019:41:10 IST Report Abuse
RajanRajan சீனன் குரானா வைரஸை உருவாக்கி உலகளவில் உயிர்பலி வாங்கி உலக பொருளாதாரத்தை சீரழித்தது போறாதுன்னு, இப்போ அவனே தடுப்பூசியையும் உலக சந்தையில் விற்று அதனாலே இன்னும் எத்தனை உயிர்பலி வாங்கி துட்டு பார்க்க களமிறங்குகிறான். உலகநாடுகள் ஒருங்கிணைந்து சீனாவை மொத்தமாக முடிக்கும் பணியில் இன்னும் காலம் தாழ்த்தாமல் களமிறங்க வேண்டும். உசார் உசார்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
15-செப்-202017:08:24 IST Report Abuse
Lion Drsekar பிள்ளையார் பிடிக்க என்பார்கள் அதுபோல் தற்போது இவர்கள் மருந்து எப்படி நம்பகத்தன்மையை ஏற்படுத்தும், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X