தமிழ்நாடு

இளநிலை உதவியாளர் பணிக்கு செப்.17,18ல் கலந்தாய்வு

Added : செப் 15, 2020
Share
Advertisement

சென்னை : பள்ளி கல்வித்துறையில், 633 இளநிலை உதவியாளர் பணிக்கு, வரும், 17, 18ம் தேதிகளில் கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, இணை இயக்குனர் பொன்னையா வழியே, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பள்ளி கல்வி துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வழியே, 633 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், வரும், 17, 18ம் தேதிகளில், கவுன்சிலிங் நடத்தி, பணி நியமனம் வழங்க வேண்டும்.கவுன்சிலிங் முடிந்ததும், 19ம் தேதி பணி நியமன ஆணை வழங்கி, பணியில் சேர்க்க வேண்டும். அசல் கல்வி சான்றிதழ், ஜாதி சான்றிதழ், மருத்துவ சான்றிதழ் உள்ளிட்டவற்றை சரிபார்த்த பின், பணி ஆணை வழங்க வேண்டும்.அதன்பின், பணியில் சேர்ந்தவர்களின் வேலை வாய்ப்பு அட்டையை பெற்று, மாவட்ட வேலைவாய்ப்பு பதிவில் இருந்து, அவர்களின் பெயரை நீக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X