அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவை கையாள்வதில் அதிமுக அரசு தோல்வி: ஸ்டாலின்

Added : செப் 15, 2020 | கருத்துகள் (46)
Share
Advertisement
கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்-19, அதிமுக, அ.தி.மு.க.,அ.இ.அ.தி.மு.க., அஇஅதிமுக, அதிமுகஅரசு, படுதோல்வி, திமுக, தி.மு.க., திமுகதலைவர்ஸ்டாலின், மு.க.ஸ்டாலின், திமுகஸ்டாலின்,  corona, coronavirus, covid-19,  admk, aiadmk, stalin, m.k.stalin, dmkchiefstalin,

சென்னை: கொரோனாவை கையாள்வதில் அ.தி.மு.க., அரசு படுதோல்வியடைந்துள்ளது என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சட்டசபையில் அவர் பேசியதாவது: கொரோனா தொற்று பாதிப்பு 5 லட்சம் பேரை தாண்டிவிட்டது. . இறப்பும் 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில், சென்னை முதலிடம் வகிக்கிறது. 30 ஆயிரத்திற்கு மேல், செங்கல்பட்டில் 20 ஆயிரத்திற்கு மேல், திருவள்ளூர் , கோவை பாதிப்பும் பதற வைக்கிறது. 10 முதல் 20 ஆயிரம் பேர் வரை கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 12; 5 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 9 உள்ளன. இந்த பாதிப்புக்கு இடையில் தான் ஊரடங்கை தளர்வு செய்துள்ளோம்.

கொரோனா இறப்பு எண்ணிக்கை, சோதனை, நோய் பாதிப்பு குணமாகி வீடு திரும்பியோர் என எதிலும், அரசின் புள்ளிவிவரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பது என் குற்றச்சாட்டு. மறைக்கப்பட்ட மரணங்களை கண்டறிய அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கை என்னவானது என தெரியவில்லை. கொரோனாவிற்கு முந்தைய நிதிநிலை அறிக்கையை மறுபரிசீலனை செய்யவில்லை. பரிந்துரை செய்ய அமைக்கப்பட்ட ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரங்கராஜன் குழு அளித்த அறிக்கை என்னவானது என தெரியவில்லை.

கொரோனா கால பேரிடர் நியமனங்கள், கொள்முதல் எதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. கொரோனா முன்கள பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட சிகிச்சை, நிதி ரூ.2 லட்சம், உயிரிழந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.50 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, இதுவரை வழங்கப்பட்டுள்ளதா? ஒட்டுமொத்தமாக கொரோனாவை கையாள்வதில் இந்த அரசு படுதோல்வி அடைந்துள்ளது என்பது எனது குற்றச்சாட்டு


latest tamil news



தமிழகத்தின் பொருளாதாரம் மேலும் படுமோசமாகும் சூழலும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், உபகரணங்கள் கொள்முதல், நியமனங்கள், மருத்துவமனை மற்றும் ஆய்வகங்கள்,வாரியாக கொரோனா சோதனைகள், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர், இறந்தவர்கள், கொரோனா பேரிடர் மாநில நிதி மற்றும் பேரிடர் நிதியில் இருந்து செலவழிக்கப்பட்ட தொகை, கொரோனாவால் மாநிலத்திற்கு எற்பட்ட நிதி இழப்பு, பொருளாதார, தொழில் வீழ்ச்சி ஆகியவை குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை, இன்னும் ஒரு நாள் தான் சட்டசபையில் நடைபெற உள்ள நிலையில் அதனை, சட்டசபையில் முதல்வர் வெளியி வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jay - Bhavani,இந்தியா
16-செப்-202014:16:38 IST Report Abuse
Jay நீட் நாடகம் தோல்வியை ஆயிருச்சு , அதனால வேறு ஏதாவது பேசி கவனத்தைத் திசை திருப்பணும். இல்லேன்னா பொழப்பு போச்சு
Rate this:
Cancel
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
15-செப்-202022:07:42 IST Report Abuse
Raghuraman Narayanan அவர் இப்படி சொல்லவில்லை என்றால் கழக கண்மணிகளே நாளை இவர் சந்திக்க முடியாது . காலத்தின் கட்டாயம். தமிழக அரசு மட்டுமல்ல. எல்லா மாநில அரசுகளும் கொரானா நோயை பரவாமல் தடுப்பதற்கு மிகுந்த பிராயர்த்தனை செய்து கொண்டு இருக்கின்றன. கடவுள் அருளால் இறப்பு விகிதம் மிக குறைவாகவே உள்ளது. மருந்தே இல்லாத நோயை கட்டு படுத்துவதில் தமிழக டார்கள் மிக சிறப்பாக கையாண்டு கொண்டு இருக்கிறார்கள்.
Rate this:
Cancel
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) சுயமாக துண்டுசீட்டை தமிழில் எழுதி வாசிக்க கூட முடியாத இந்துமத விரோதி சுடலை கான் தமிழை பத்தி பேசுறான் திருட்டு திமுக வேணாம் போடா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X