சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில்வே ஊழியர் வீட்டில் ரூ. 5 லட்சம் நகை திருட்டு

Added : செப் 15, 2020
Share
Advertisement
 ரயில்வே ஊழியர் வீட்டில் ரூ. 5 லட்சம் நகை திருட்டு

கடலுார் :கடலுாரில், ரயில்வே ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பு நகைகளை திருடிச்சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் செம்மண்டலம் வரதராஜன் நகர் முதல் குறுக்குத்தெருவில் தனியார் வங்கி உள்ளது. நேற்று காலை பணிக்கு வந்த வங்கி ஊழியர்கள் வங்கியின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கடலுார் புதுநகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வங்கியில் திருட்டு நடக்கவில்லை என்பது தெரியவந்தது.
அப்பகுதியில் இருந்த சி.சி.டிவி கேமராவை பார்த்தபோது, வங்கியின் எதிரே உள்ள வீட்டில் வசித்து வரும் ரயில்வே ஊழியர் மகாராஜன் வீட்டிற்குள் சென்றது தெரியவந்தது. அங்கு போலீசார் விசாரித்தனர்.குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுள்ள மகாராஜனுக்கு, வீட்டு உரிமையாளர் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார்.அவர் வீட்டிற்கு வந்து பார்த்தார்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பீரோவில் இருந்த 14 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 5 லட்சம்.கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். எஸ்.பி., ஸ்ரீஅபிநவ், நேரில் விசாரணை நடத்தினார். ஆள் நடமாட்டம் உள்ள நகரின் முக்கிய பகுதியில் நடந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X