'டிக்டாக்' புதிய மைல்கல்: ஐரோப்பாவில் 10 கோடி பயனர்கள்!

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

லண்டன்: 'ஐரோப்பாவில் 10 கோடி பயனர்கள் டிக்டாக்கைப் பயன்படுத்துகின்றனர். எங்கள் நிறுவனத்துக்கென 1,600 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்' என, டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.



latest tamil news



சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக்டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்டது. கடந்த மாதம் அமெரிக்காவில் 10 கோடி பயனர்களைச் சென்றடைந்த டிக்டாக், அங்கும் பெரும் பிரச்சினையைச் சந்தித்து வருகிறது. 'டிக்டாக்கின் அமெரிக்கப் பிரிவுச் செயல்பாடுகள், செப்., 20க்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்கப்படவில்லை என்றால், அமெரிக்காவிலும் டிக்டாக் தடை செய்யப்படும்' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாகக் தெரிவித்துள்ளார்.


latest tamil news



டிக்டாக்கை வாங்க மைக்ரோசாப்ட், ஆரக்கிள் உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டியிட்டன. இதில் மைக்ரோசாப்ட், வால்மார்ட் நிறுவனத்துடன் இணைந்தே இந்த பேரத்தில் களமிறங்கியது. ஆனால் மைக்ரோசாப்டின் முயற்சிகள் நிராகரிக்கப்பட்டதாக அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆரக்கிள் நிறுவனமே டிக்டாக்கை வாங்கும் என்ற தகவல்கள் நேற்று (செப்., 14) வெளியாகின. இதை சீன அரசின் தொலைக்காட்சி ஊடகம் மறுத்துள்ளது.


latest tamil news



இந்நிலையில், டிக்டாக் செயலி ஐரோப்பாவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக டிக் டாக் தரப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து டிக்டாக்கின் ஐரோப்பியப் பிரிவு பொது மேலாளர் ரிச் வாட்டர்வொர்த் தெரிவித்துள்ளதாவது:

ஓர் அசாதாரண காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும். அதே நேரத்தில், எங்கள் வியாபாரம் இந்த வருடம் மிகச் சிறப்பாகப் பெருகியுள்ளது. இத்தகைய சூழலில் ஐரோப்பிய மக்கள் எப்படி டிக்டாக்கை வரவேற்றுள்ளனர் என்பது தெரிந்து மகிழ்ச்சியடைந்துள்ளோம். இன்று ஐரோப்பாவில், 10 கோடிக்கும் அதிகமான பயனர்கள் டிக்டாக்கைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-செப்-202017:41:54 IST Report Abuse
narapara இந்தச் செய்தியால் நம் மக்களுக்கு என்ன பயன்? எல்லோரும் நிம்மதியாக இருப்பது பிடிக்கவில்லையோ?
Rate this:
Cancel
mohan - chennai,இந்தியா
15-செப்-202015:26:30 IST Report Abuse
mohan இந்த மாதிரி செயலிகளினால் என்ன புல்லு விலையுதா அல்லது நெல்லு விலையுதா...அவங்க அவங்க வேலைய பார்த்தா, எதிர்காலத்துக்கு நல்லது....
Rate this:
Cancel
R S BALA - Tiruvallur,இந்தியா
15-செப்-202015:09:21 IST Report Abuse
R S BALA டிக்டாக் செயலி இல்லாமல் தற்போது நாங்கள்(இந்தியர்கள் ) மிக நிம்மதியாக இருக்கிறோம் என்பதை நிரூபித்துள்ளோம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X