அரசியல் செய்தி

தமிழ்நாடு

நடிகர்களை ஈர்க்கும் பா.ஜ., : காயத்ரி ரகுராம் விளக்கம்

Added : செப் 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கோவை : ''திராவிட கட்சிகளின் பொய் பிரசாரங்கள், சினிமா துறைக்கு தெரிந்துவிட்டதால் தான் பா.ஜ., நோக்கி வருகின்றனர்,'' என, பா.ஜ., கலாசார பிரிவு மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் கூறினார்.

கோவையில் நடிகை காயத்ரி ரகுராம் நிருபர்களிடம் கூறியதாவது:
தி.மு.க., உட்பட திராவிட கட்சிகள் பொய் பிரசாரம் செய்து, மக்களை ஏமாற்றி வருகின்றன. இது பொதுமக்களுக்கும், சினிமா துறையினருக்கும் நன்கு தெரிந்து விட்டது. அதன் காரணமாகவே, சினிமா நடிகர்கள் பலர் பா.ஜ.,வை நோக்கி வருகின்றனர்.'நீட்' தேர்வை வைத்து தி.மு.க., அரசியல் செய்கிறது. தற்கொலைகளை அரசியலாக்குவது மிகவும் கொடுமையானது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்க வேண்டும். எதற்கும் தற்கொலை ஒரு முடிவல்ல. 'நீட்' தேர்வு குறித்து உதயநிதி தெரிவித்த கருத்து, யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ., இடம்பெறும் கூட்டணியே ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bigu -  ( Posted via: Dinamalar Android App )
15-செப்-202015:09:17 IST Report Abuse
bigu எல்லாம் கரெக்ட் தான் ,ஆனா நீங்க திரைத்துறையினர் என்று கூறுவது வியப்பா இருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X