சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சொந்த வீட்டில் திருடியவர் கைது

Added : செப் 15, 2020
Share
Advertisement
 சொந்த வீட்டில் திருடியவர் கைது

பண்ருட்டி : சொந்த வீட்டில் 6.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணம் ஆகியவற்றை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தேசிங்கு, 55; மனைவி பச்சையம்மாள். இவர்களின் மகன் மணிகண்டன், 25; கார் டிரைவர்.மகள் மணிமாலா திருமணமாகி, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளார். மணிமாலா, தன் நகை மற்றும் பணத்தை தன் தாயாரிடம் கொடுத்து, பத்திரப்படுத்தி வைக்க கூறியுள்ளார்.கடந்த, 12ம் தேதி காலை, 6:00 மணிக்கு தேசிங்கு, பச்சையம்மாள், மணிகண்டன் ஆகியோர் வீட்டை பூட்டி, நிலத்திற்கு அரும்பு எடுக்க சென்றனர்.
சிறிது நேரத்தில், மணிகண்டன் அங்கிருந்து சென்று விட்டார்.காலை, 8:30 மணிக்கு தேசிங்கு வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவு திறக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 18 சவரன் தங்க நகை மற்றும், 2.60 லட்சம் ரூபாய், 21 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கொலுசு ஆகியவை திருடு போயிருந்தது.பண்ருட்டி போலீசார் விசாரணையில், சொந்த வீட்டில் மணிகண்டன் திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்து, 6.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மணிகண்டன் வாக்குமூலம்:
என் மனைவி புவனேஸ்வரி, சின்னத்திரையில் நடித்து வருகிறார். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வந்தார். அவர் சொந்தமாக படம் இயக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார்.இதற்காக, அவருக்கு பணம் தேவைப்பட்டது. என் தங்கையின் நகை மற்றும் பணம் என் வீட்டில் உள்ளதால், அதை திருடி சொகுசாக இருக்கலாம் என திட்டமிட்டோம்.இதன்படி, கடந்த 12ம் தேதி நகை மற்றும் பணத்தை திருடினேன். ஆனால், திருடு போன மாதிரி நாடகமாடியதை, போலீசார் கண்டுபிடித்து, பணம், நகைஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.இது தெரிந்து, திருடிய பொருட்களை வாங்க வந்த என் மனைவி, தலைமறைவாகி விட்டார்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X