சென்னை: தமிழகத்தில் இதுவரை கொரோனா தடுப்பு, சிகிச்சை, நிவாரணப் பணிகளுக்கு என ஒட்டுமொத்தமாக ரூ.7,167.97 கோடி செலவிடப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கலைவாணர் அரங்கில் மூன்று நாட்கள் தமிழக சட்டசபை கூடுகிறது. நேற்று (செப்.,14) தொடங்கிய கூட்டத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் அமர்வு நடைபெற்றது. இதில், கொரோனா நிவாரணப் பணிகளுக்கு தமிழக அரசின் செலவினங்கள் குறித்து துணை முதல்வர் ஓபிஎஸ் பதிலளித்தார்.

அதில், தமிழகத்தில் இதுவரை கொரோனா தடுப்பு, சிகிச்சை, நிவாரணப் பணிகளுக்கு என ஒட்டுமொத்தமாக ரூ.7,167.97 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், இதில், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்காக ரூ.830.60 கோடியும், மருத்துவக் கட்டுமானப் பணிக்கு ரூ.147.10 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை மற்றும் இலவச பொருள்கள் வழங்க ரூ.4,896.05 கோடியும், கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு ரூ.262.25 கோடியும் இதுவரை செலவு செய்யப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE