பொது செய்தி

இந்தியா

எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயாராக உள்ளோம்: சீனாவுக்கு ராஜ்நாத் எச்சரிக்கை

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
 Defence Minister Rajnath Singh, Rajanth Singh,  India-China border issue,  India-,China, border, army, ராஜ்நாத்சிங், பாதுகாப்புத்துறைஅமைச்சர், ராஜ்நாத், இந்தியா, சீனா, ராணுவம், எல்லை

புதுடில்லி: எல்லைப்பகுதியில் எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயாராக உள்ளோம் என்பதை உறுதியுடன் தெரிவிப்பதாக, லோக்சபாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

சீனாவுடனான எல்லைப்பிரச்னை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லோக்சபாவில் அளித்த விளக்கம்:
* எல்லை பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை கொண்டு வர இந்தியாவும், சீனாவும் ஒப்பு கொண்டுள்ளன. இரு தரப்பு உறவில் முக்கிய வளர்ச்சி ஏற்படுத்தஇது முக்கியம்.

*சீனாவுடனான லடாக் எல்லை பிரச்னை தீரவில்லை. தற்போதுவரை, இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ளும்படியான தீர்வு ஏதும் இல்லை. எல்லை குறித்து சீனா ஏற்க மறுக்கிறது. இந்த பிரச்னை காரணமாக இரு நாட்டு உறவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

*எல்லையில் சூழ்நிலையை மாற்ற முயல்வது இரு தரப்பு ஒப்பந்தங்களை மீறிய செயல் என தூதரக ரீதியில் சீனாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*எல்லையில் சீனாவின் அத்துமீறல், கடந்த கால ஒப்பந்தங்களை மீறிய செயலாகும். 1993, 1996 ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தங்களை சீனா மீறியுள்ளது. நமது எல்லைகளை பாதுகாக்க, சீனாவின் செயலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.

*எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் முதலே, ஆயுதங்களுடன் அதிகளவு சீன ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. லடாக்கின் கிழக்கு பகுதி, கோக்ரா, கோங்கா லா, பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரை பகுதியில், இந்திய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news*இந்திய படைகள் ரோந்து சென்ற போது சீனா தலையிட்டது. அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.

*தற்போதைய நிலையே தொடர வேண்டும் என சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்.

*சீனாவுடனான நமது பேச்சுவார்த்தையில் 3 விஷயங்கள் வலியுறுத்தப்பட்டது.
அவை,
1.இரு நாடுகளும் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை மதிக்க வேண்டும். கண்டிப்பாக பின்பற்ற வேண்டும.
2. தற்போதைய நிலையை மாற்றக்கூடாது
3. இரு தரப்பினரும் இடையிலான அனைத்து ஒப்பந்தங்களும் புரிந்துணர்வுகளும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்

*சீன ராணுவத்தின் நடமாட்டத்தை கண்டறிந்த இந்திய ராணுவம் அவர்களை தடுத்து நிறுத்தியது

*சீன ராணுவம், எல்லைப்பகுதியில் தன்னிச்சையாக மாற்ற முயன்றது. ஆனால், இந்திய ராணுவம் அதனை தடுத்து நிறுத்தியது

*எல்லையில் உள்ள சூழ்நிலை, முன்பு போல் தற்போது இல்லை

*எல்லைப்பகுதியில் எந்த சூழ்நிலையையும் சந்திக்கவும் அதனை கையாளவும் தயாராக உள்ளோம் என்பதை உறுதியாக கூறுகிறேன்.

*ராணுவத்திற்கு எப்போதும் பார்லிமென்ட் ஆதரவாக உள்ளது

*இந்தியாவின் இறையாண்மையையும், எல்லையையும் பாதுகாக்கும் நமது வீரர்களுக்கு ஆதரவாகவும், தோளோடு தோள் கொடுத்துநிற்கிறோம் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இந்த அவையை நான் வலியுறுத்துகிறேன்.

*நமது வீரர்களுக்கு மன உறுதி அதிகம். அதில் யாரும் சந்தேகப்பட வேண்டாம். பிரதமரின் லடாக் பயணம், இந்திய ராணுவத்துடன் மக்கள் துணை நிற்கிறார்கள் என்ற செய்தியை அனுப்பியுள்ளது.

*எல்லை நிர்வாகத்தில் இந்திய ராணுவம் பொறுப்பான அணுகுமுறையை கையாண்டது. அதே நேரத்தில் இந்தியாவின் இறையாண்மையையுணும் எல்லையை பாதுகாப்பதிலும் எங்களுக்கு உள்ளஉறுதித்தன்மையை சந்தேகப்படக்கூடாது என மாஸ்கோவில் சீன பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்தித்த போது உறுதியாக தெரிவித்தேன். இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-செப்-202021:40:40 IST Report Abuse
ஆப்பு இதை ஏன் மந்திரி, முப்படைத் தளபதி, ஜெனரல், பிரிகேடியர்நு எல்லோரும் அடிக்கடி சொல்றாங்க...
Rate this:
Cancel
15-செப்-202019:29:35 IST Report Abuse
Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) சீனாக்காரன் concentration கேம்ப் வைத்தும் அரைவேக்காடுகள எப்படி அவென்க்கு முட்டு கொடுக்கிறாரகள் ???
Rate this:
Cancel
Indian Ravichandran - Chennai,இந்தியா
15-செப்-202018:49:47 IST Report Abuse
Indian  Ravichandran ஜிங் பிங்கின் ஏஜெண்ட்ஸ் ராணுவ அமைச்சர் சொன்னதை அப்படியே மெசேஜ் பாஸ் பண்ணிருங்கப்பா வழக்ம தாரா பிச்சைகாசாவிட அதிகமாகிடைக்கும் பொறுக்கியெடுத்து பொண்டாட்டி புள்ளைங்க வகுத்த நிரப்புங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X