ஹிந்தி பேசாத மாநிலங்களில் மட்டும் மும்மொழி கொள்கை ஏன்?: குமாரசாமி கேள்வி

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (40)
Share
Advertisement
பெங்களூரு: ஹிந்தி பேசாத மாநிலங்களில் மட்டும் ஏன் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்படுகிறது என கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.ஹிந்தியை அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்ட செப்.,14ஐ ஹிந்தி தினமாக கொண்டாடி வருகின்றனர். இது குறித்து கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: நாட்டில் பல்வேறு மொழிகள்,
Kumarasamy, Karnataka, HindiImposition, குமாரசாமி, கர்நாடகா, ஹிந்தி, மும்மொழிக்கொள்கை

பெங்களூரு: ஹிந்தி பேசாத மாநிலங்களில் மட்டும் ஏன் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்படுகிறது என கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.

ஹிந்தியை அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்ட செப்.,14ஐ ஹிந்தி தினமாக கொண்டாடி வருகின்றனர். இது குறித்து கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: நாட்டில் பல்வேறு மொழிகள், கலாசாரங்களை உள்ளடக்கிய இந்தியாவில் கன்னடம் உள்பட பிற மொழிகள் மீது ஹிந்தியை வலுக்கட்டாயமாக திணிக்கும் முயற்சி நடந்து வருகிறது. ஹிந்தி தின விழா கொண்டாடியது கூட அத்தகைய நோக்கம் கொண்டது தான். மொழி ஆணவத்துடன் கொண்டாடப்படும் ஹிந்தி தின விழாவுக்கு கன்னடர்களின் எதிர்ப்பு உள்ளது. ஹிந்தி தேசிய மொழி அல்ல. அத்தகைய ஒரு அம்சம் அரசியல் அமைப்பு சட்டத்தில் இல்லை.


latest tamil news


இருந்தாலும் ஹிந்தி தேசிய மொழி என்று முன்னிறுத்தும் முயற்சி முன்பு இருந்தே தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அது மேலும் அதிகரித்துள்ளது. நாட்டின் பிற மொழியினர் கிளர்ந்து எழுவதற்கு முன்பு ஹிந்தி திணிப்பை கைவிட வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் மொழிகளை தேர்ந்தெடுத்து கற்கலாம். ஆனால் ஒரு மொழியை திணித்து கற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தினால் அது சாத்தியமில்லை. நாட்டின் ஒற்றுமை, கலாசாரத்திற்கு பங்கம் ஏற்படுத்தக்கூடாது. ஹிந்தி தின விழா கொண்டாடுவது போல், கன்னடம் உள்பட பிற மொழிகளின் தின விழாவையும் கொண்டாட வேண்டும்.


latest tamil news


ஹிந்தி விழாவை போல் மும்மொழி கொள்கையை முன்னிறுத்தும், தேசிய கல்வி கொள்கையிலும் ஹிந்தியை திணிக்கும் முயற்சி இடம் பெற்றுள்ளது. இருமொழி கொள்கை இருந்தால் என்ன பிரச்சினை?. ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில் மும்மொழி கொள்கை பின்பற்றப்படுகிறதா?. ஹிந்தி பேசாத மாநிலங்களில் மட்டும் ஏன் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்படுகிறது. சமீபகாலமாக ஹிந்தி மொழி சித்தாந்த ரீதியாக மாற்றப்பட்டு வருகிறது. தேசிய வாதம், தேசபக்தி, இந்துத்துவாவுடன் ஹிந்தி மொழியும் இணைக்கப்பட்டுள்ளது. இத்தகைய முயற்சி மிகப்பெரிய தேசத்துரோகம். பல்வேறு மொழி பேசும் நமது நாட்டில், ஹிந்தி மூலம் தேசபக்தியை ஏற்படுத்த முயற்சி செய்வது சரியா?. இது ஒற்றுமைக்கு விடப்பட்ட சவால். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srinivasan - stockholm,சுவீடன்
17-செப்-202018:18:22 IST Report Abuse
srinivasan காங்ரஸ் தான் பதில் சொல்லோணும். பப்பு கிட்டே இவரு கேக்கோணும்.
Rate this:
Cancel
Gopalakrishnan Ra - Madurai,இந்தியா
16-செப்-202019:10:21 IST Report Abuse
Gopalakrishnan Ra அரசியல்வாதியாக இருக்க நன்றாக பொய் பேசணும். இல்லாததை இருப்பதாக சொல்லணும். ஆளும்கட்சி ஒன்று கூறினால் அதை திரித்துக்கூறவேண்டும். குமாரசாமி முதல் அமைச்சர் ஆக இருந்தபோது கர்நாடகத்தில் ஹிந்தி படித்தனர். இன்றும் படிக்கிறார்கள். இவரை கர்நாடகத்தில் முதல் அமைச்சர் ஆக்குங்கள் மும்மொழி திட்டத்தை எதிர்த்து வாய் திறக்கமாட்டார். எல்லாம் பதவி படுத்தும் பாடு.
Rate this:
Cancel
16-செப்-202012:43:15 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) மூன்றாவது மொழி வேண்டாமென்று கர்நாடக மக்களுக்கு அறிவிக்க தயாரா mr குமரமசாமி அவர்களே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X