பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டில் இருந்தே தேர்வெழுதி அனுப்பி வைக்கலாம்: சென்னை பல்கலை

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
ChennaiUniv, SemesterExam, A4, Colleges, சென்னை, பல்கலை, செமஸ்டர், தேர்வு, அறிவிப்பு

சென்னை: சென்னை பல்கலையுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளின் இறுதி செமஸ்டர் தேர்வுகளை வீட்டில் இருந்தே ‛ஏ4' தாளில் எழுதி அனுப்பலாம் என சென்னை பல்கலை அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இருப்பினும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து இறுதியாண்டு தவிர அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வு ரத்து செய்ய யுஜிசி ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்துவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியிருந்தன. ஆனால், அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் தேர்வு எழுதுவதற்கான வசதிகள் இல்லை என கூறப்பட்டு வந்தது.


latest tamil news



இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகம் தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆன்லைன் வழி தேர்வுகள் கிடையாது என்றும் மாணவர்கள் வீட்டில் இருந்த படி ஏ4 தாளில் தேர்வு எழுதி கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற அனைத்து தனியார் கல்லூரிகள் மற்றும் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களும் இந்த புதிய முறையில் செமஸ்டர் தேர்வு எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



செமஸ்டர் தேர்வுகளை வீட்டில் இருந்தபடியே எழுதி, இறுதி விடைத்தாள்களை ஸ்பீட் போஸ்ட் மூலம் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கலாம் எனவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. விடை எழுதும் ஏ4 தாள்களின் ஒவ்வொரு பக்கத்திலும் மாணவர்களின் பெயர், பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு 18 தாள்களுக்கு மிகாமல் எழுதி அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 11 மணி வரை, பகல் 2 மணி முதல் 3 மணி வரையும் என ஒவ்வொரு தேர்வும் 90 நிமிடங்களுக்கு நடைபெற உள்ளது. வினாத்தாள் தரவிறக்க இணைப்பு அந்தந்த மாணவர்களின் செல்போன் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
17-செப்-202000:25:32 IST Report Abuse
தல புராணம் தாலியை பிடுங்கி வெச்சி நீட் தேர்வு எழுத தடையில்லை.. இதை வீட்டிலிருந்தே எழுதலாம். ஆளு வெச்சி எழுதி டிகிரி சர்டிபிக்கேட்டை ஒளிச்சு வெச்சவங்களுக்கு வேற என்ன தெரியும்..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
17-செப்-202000:23:29 IST Report Abuse
தல புராணம் ப்ராக்டரிங் என்றால் என்ன (தேர்வு மேற்பார்வை), அது இல்லாமல் எழுதும் தேர்வு எப்படி நியாயமானதாக இருக்கும் என்ற அடிப்படை அறிவற்ற ஞானசூன்யங்கள் எல்லாம் கல்வித்துறையில் மேலே இருக்கான்.. லஞ்சம் கொடுத்து வந்தவனுங்க..
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
15-செப்-202023:10:59 IST Report Abuse
vnatarajan இந்த தேர்வை நூறு விழுக்காடு கண்காணிப்பது மிகவும் கஷ்டம். பேசாமல் எல்லோரையும் பாஸாகிவிட வேண்டியதுதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X