ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

மாஸ்கோ: 'ரஷ்யாவின் 'ஸ்புட்னிக்-வி' கொரோனா தடுப்பூசி, 300க்கும் அதிகமானோருக்கு செலுத்தப்பட்டது. அதில், 14 சதவீதம் பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன' என, ரஷ்ய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.



latest tamil news




ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. 'ஸ்புட்னிக்-வி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து, 'கிளினிக்கல் பரிசோதனையில் 3ம் கட்டத்துக்குச் செல்லவில்லை' எனக் கூறப்பட்டது.
இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில், தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார், ரஷ்ய அதிபர் புதின். ஆனால், உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் அதைத் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.


latest tamil news



இந்நிலையில் தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தியது ரஷ்யா. தங்கள் தடுப்பூசி அனைத்து கட்ட சோதனைகளையும் வென்றுவிட்டதாகவும், ஐரோப்பிய நாடுகளின் கேள்விகளுக்கும் விடையளித்துவிட்டோம் என்றும் ரஷ்யா அறிவித்தது. 'ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி நாட்டின் சுகாதாரத் துறை ஒப்புதழக்கு பிறகு இந்த வாரம் பயன்பாட்டுக்கு வரும்' என, ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


latest tamil news



இந்நிலையில், ரஷ்ய சுகாதாரத் துறை கூறுகையில், ''ரஷ்யாவின் 'ஸ்புட்னிக்-வி' எனப் பெயரிடப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி, 300க்கும் அதிகமான தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் 14 சதவீதத்தினருக்கு உடல் சோர்வு, தசை வலி மற்றும் அதிக உடல் வெப்பநிலை பதிவாகியுள்ளது' எனத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Logical Indian - Chennai,இந்தியா
16-செப்-202002:45:33 IST Report Abuse
Logical Indian தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார், ரஷ்ய அதிபர் புதின் இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்குது... பச்சை தண்ணிய குடிச்சிட்டு பாயாசம் சாப்ட்டேனு சொன்னானாம்...
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-செப்-202019:56:57 IST Report Abuse
தமிழ்வேல் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில், தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார், ரஷ்ய அதிபர் புதின் என்பதைவிட "தனது மகளுக்கே இந்த மருந்தை செலுத்தியதாகக் கூறினார்" என்று இருக்க வேண்டும்..
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-செப்-202019:55:09 IST Report Abuse
தமிழ்வேல் மூன்றாம் கட்ட சோதனை 30 000 பேருக்கு செய்யப்பட வேண்டும். செய்து சிலகாலம் காத்திருந்து பாதிப்பு இல்லை என்றால் மட்டுமே அனுமதிக்கப்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X