பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பூசி - இந்தியாவின் ஒத்துழைப்பு தேவை: பில்கேட்ஸ்

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
India, vaccine, world,cooperation, Covid-19, Bill Gates,

புதுடில்லி: தடுப்பு மருந்து விநியோகத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது. தடுப்பு மருந்துவிநியோகத்தில் இந்தியாவின் ஒத்துழைப்பு உலக நாடுகளுக்கு தேவை என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: தடுப்பு மருந்து உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது. இதனால், கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி செய்வதில் இந்தியாவின் ஒத்துழைப்பு உலக நாடுகளுக்கு தேவை. கொரோனாவுக்கான தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு இந்தியாவில் அதிகளவு உற்பத்தி செய்யும். இந்தியாவில் தடுப்பு மருந்து உருவாக வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர்.


latest tamil news



அந்த மருந்து பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். இதனால், அடுத்த ஆண்டு மருந்து உற்பத்தி செய்யப்படும். அவ்வாறு உற்பத்தி செய்யும் போது, அது அதிகளவில் இருக்கும். அடுத்த ஆண்டின் முதல்காலாண்டில், பல கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிடும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
15-செப்-202021:55:47 IST Report Abuse
sundarsvpr மருந்து எப்போது வரும் என்பது விடை காண முடியவில்லை. எனவே முக்கிய கவனம் தோற்று பரவாமல் தடுப்பது. ஒரு சிலர் கவசம் அணியவில்லையெனின் கொரோனா பரவ வாய்ப்புஉண்டு. அபராதம் நிலைமையை கட்டுப்படுத்தாது. தெருவில் நடக்கும்போது முககவசம் அணியாமல் வந்தால் கவசம் ஒன்று கொடுக்கலாம். இதனால் ஒரு பெரிய பண இழப்பு இல்லை.
Rate this:
Cancel
15-செப்-202021:26:52 IST Report Abuse
ஆப்பு இந்தியாவுல எல்லா ஜெனரிக் மருந்து கம்பெனிகளும் காத்துக்கிட்டிருக்கு. பிரதமரிலிருந்து எல்லோரும் ஃபார்முலாவுக்கு காத்துக்கிட்டிருக்காங்க.
Rate this:
Cancel
Venkateswaran Murugandi - Chennai,இந்தியா
15-செப்-202021:05:57 IST Report Abuse
Venkateswaran Murugandi ௧. நிச்சயமற்ற தன்மை, பலவிதமான அறிகுறிகள், கிருமியின் பாலிமாரபிஃக் தன்மை, இவைகளைக் கருத்தில் கொண்டால் இந்தப் கிருமி மனிதனால் உருவாக்கப்பட்டது என்றே என்னால் கருத முடிகிறது. ௨. இதனால் பாதிக்கப்பட்ட நாடுகள் திரை மறைவு சண்டைகளை நிகழ்த்தலாம். அப்பொழுது பொருளாதார மற்பறும்யோ வெப்பன் பயன்படுத்த சாத்தியக்கூறுகள் உள்ளன. இதன் பொருட்டு நம் பாரதம் கொலட்ரியல் டேமேஜ் உள்ளாக்க் கூடிய சாத்தியங்கள் உண்டு. ஆகவே, எச்சருக்கையாக இருப்பது நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X