புதுடில்லி: கடந்த 2016 எப்., முதல் 2020 ஏப் வரையில் இந்திய நிறுவனங்களில் சீனா ஒரு பில்லியன் டாலர் அளவிற்கு முதலீடு செய்துள்ளன என ராஜ்யசபாவில் எழுத்து பூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கம்பெனி விவகாரத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் அனுராக்சிங் ராஜ்யசபாவில் அளித்த எழுத்து பூர்வமான பதிலில் கூறப்பட்டு இருப்பவதாவது: கடந்த 2016ம் ஆண்டு ஏப்.., முதல் 2020 மார்ச் வரையிலான கால கட்டங்களில் சுமார் 1,600 க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் நேரடி முதலீடுகளை பெற்றுள்ளன. சீனாவிலிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வெளிநாட்டு நேரடி முதலீடுகளை பெற்றுள்ளன.

குறிப்பாக ஆட்டோமொபைல் தொழில், புத்தகங்களை அச்சிடுதல் (லித்தோ பிரிண்டிங் தொழில்), எலக்ட்ரானிக்ஸ், மின்சார உபகரணங்கள் உள்ளிட்ட 46 துறைகளில் சீனாவிலிருந்து தலா 100 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான நேரடி முதலீட்டை பெற்றன. இவற்றில் சீனாவிடம் இருந்து அதிகபட்சமாக ஆட்டோமொபைல் தொழிலில் அந்நிய நேரடி முதலீடு பெறப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE