பொது செய்தி

இந்தியா

ரூ. 9 ஆயிரம் கோடியை இழந்த தியேட்டர்கள்

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
 ரூ. 9 ஆயிரம், கோடியை, இழந்த, தியேட்டர்கள்

புதுடில்லி: நாட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் ரூ. 9 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையால் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், நாடு முழுவதும் இன்னும் தியேட்டர்கள், மற்றும் மல்டி பிளக்ஸ் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. தியேட்டர்களை திறக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news




இது தொடர்பாக மல்டிப்பெளக்ஸ் அசோசியேஷன் வெளியிட்டுள்ள அறிக்கை, நாட்டில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் ரூ. 9 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. தியேட்டர்களால், நேரடியாக 2 லட்சத்திற்கும் மேற்பட்டோரும், மறைமுகமாக லட்சத்திற்கும் மேற்பட்டோரும் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

ஊரடங்கு தளர்வில் ஷாப்பிங் மால்கள், விமானநிலையங்கள், சில்லறை விற்பனை நிலையங்களை உணவகங்கள், ஜிம்கள், பார்கள், மெட்ரோ ரயில் சேவைகள் உள்ளிட்டவை செயல்பாட்டிற்கு வந்துள்ளன.இவற்றில் பின்பற்றப்படுவது போன்ற பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க ஏற்கனவே சினிமா தியேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன. எனவே தியேட்டர்களை திறக்க விரைவாக அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
16-செப்-202005:39:15 IST Report Abuse
தல புராணம் 9000 கோடி சேமித்த பொதுமக்கள்..
Rate this:
Cancel
bhuvana - newdelhi,இந்தியா
15-செப்-202023:46:07 IST Report Abuse
bhuvana இதே நிலையில் பல கல்லூரிகள், பள்ளிகள் உள்ளன. இதில் பல சிறிய கல்லூரிகள், பள்ளிகளின் நிலை பரிதாபம். ஆறு மாதமாக் எவ்வித வ்ரும்படியில்லாமல், சொத்துவரி மற்றும் பல வரி சுமைகள். சம்பளம். இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் சொற்ப வருமானத்தில் நடத்தப்படும் கல்வி சமூகப்பணியாக செயல்படும் கல்வி நிறுவனங்கள் மூடும் நிலையில் உள்ளது. இதில் அரசு அதிகாரிகள் உதவியுடன், அரசு ஆசிரியர்கள் பல தனியார் பள்ளி மாணவர்களை இலவசம் கொடுத்து இழுக்கும் வேலை நடைபெறுகின்றது. மொத்தத்தில் பல சிறிய நல்ல பள்ளி நிறுவனர்களின் நிலை பரிதாபம். இதனால் பல ஆசிரியர்கள் வேலையிழப்பு, பல ஊழியர்கள், வாகன ஊழியர்கள் வேலையிழப்பு, தனிப்பட்ட முறையில் பள்ளி ஆட்டோவோட்டுபவர்கள், புத்தக வெளியீட்டார்கள் வேலையிழப்பு. நினத்தால் கவலையளிக்கின்றது
Rate this:
Cancel
Krish - Chennai,இந்தியா
15-செப்-202022:51:23 IST Report Abuse
Krish கருப்பு பணம் குறைய கொரோனா ஒரு காரணம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X