பாக்.,கில் ஐந்து மாத இடைவெளிக்கு பின் பள்ளி கல்லூரிகள் திறப்பு

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஐந்து மாத இடைவெளிக்கு பின்னர் பள்ளி,கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.



latest tamil news



கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானில் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் அந்நாட்டில் வைரசின் தாக்கம் குறைந்ததை அடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்கப்பட்டன.

இதன்படி இன்று முதல்(15ம் தேதி) பல்கலைகழகங்கள் மேல்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டன. வரும் 23ம் தேதி முதல் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. துவக்கப்பள்ளிகள் வரும் 30 ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளது.


latest tamil news



மாணவர்கள் குழுவாக பிரிக்கப்பட்டு மாற்று தினங்களில் பள்ளிக்கு வருவர். ஆசிரியர்கள் மாணவர்கள் முககவசம் அணிவது கட்டாயமாகும். பள்ளி நுழைவு வாயிலில் கைகழுவுதல் மற்றும் சானிடைசர் வைத்திருக்க வேண்டும். அனைத்து ஆண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 27,277 சோதனைகள் உள்பட நாட்டில் 29,95,890 கோவிட்-19 பரிசோதகைள் நடத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
16-செப்-202009:39:07 IST Report Abuse
 Muruga Vel மதரஸா தானே அதிகம் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X