பொது செய்தி

இந்தியா

எம்.பி.,க்கள் சம்பள குறைப்பு மசோதா:லோக்சபாவில் நிறைவேற்றம்

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
lok sabha, passes bill, MPs salaries cut

புதுடில்லி: கொரோனா நெருக்கடி காலத்தில் ஏற்படும் நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய, எம்.பி.,க்களின் சம்பளத்தில், 30 சதவீதம் பிடித்தம் செய்து வழங்குவதற்கான மசோதா, லோக்சபாவில் நிறைவேறியது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மத்திய அரசு, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அடுத்த ஒரு ஆண்டிற்கு, பார்லிமென்ட் எம்.பி.,க்களின் சம்பளத்தில் இருந்து, 30 சதவீதம் பிடித்தம் செய்து வழங்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு, 1954ம் ஆண்டின், பார்லிமென்ட் உறுப்பினர்களின் சம்பளம், அலவன்ஸ் மற்றும் பென்ஷனுக்கான சட்டத்தில், திருத்தம் செய்ய வேண்டும் என்பதால், அதற்கான ஒப்புதலை, மத்திய அமைச்சரவை, கடந்த ஏப்ரல், 6ம் தேதி வழங்கியது.


latest tamil news



இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், மழைக்கால கூட்டத்தொடர் நேற்று கூடியது. அடுத்த ஒரு ஆண்டிற்கு, எம்.பி.,க்களின் சம்பளத்தில் இருந்து, 30 சதவீதம் பிடித்தம் செய்து வழங்குவதற்கான மசோதாவை, லோக்சபாவில், மத்திய பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த மசோதா, லோக்சபாவில் இன்று நிறைவேறியது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
16-செப்-202011:00:25 IST Report Abuse
suresh kumar // எனவே, சம்பளமே இல்லாமல் கூட மக்கள் பணி ஆற்றுவார்கள்..// வெறும் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி அதில் கோடிக்கணக்கில் சேமித்து வைத்தவர்... அவரிடம் பாடம் படித்தவர்கள் உள்ள நாடு இது.
Rate this:
Cancel
Balasubramanian - Bangalore,இந்தியா
16-செப்-202005:25:56 IST Report Abuse
Balasubramanian முப்பது சதவிகிதத்தை 100% ஆக குறைக்கலாம். ம்க்கள் சேவைக்கு கூலி வாங்குவது கேவலம். அதை தொகுதி மேம்பாட்டுக்கு செலவழிக்கலாம் யார் ஒருவர் மக்களவையில், ஆர்ப்பாட்டம் கூச்சல் இல்லாமல், அவை முழு நேரமும் நடக்க ஒத்துழைத்து, உரிய முறையில் அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாரோ, அவருக்கு தான், அல்லது அவர் சார்ந்த கட்சிக்கு தான், அந்த தொகுதியில் போட்டியிட, அடுத்த முறை வாய்ப்பு என, ஒரு சட்டம் ஏற்பட வேண்டும்.
Rate this:
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
16-செப்-202005:02:11 IST Report Abuse
rajesh MP களின் சம்பளத்தில் இந்த மோடி அரசு கை வைக்கிறது என்று சுடலை அறிக்கை விடும்..... வட நாட்டு பப்புவும் இதற்க்கு ஒரு அறிக்கை விடும் பாருங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X