4 மாநிலங்களில் இருந்து 50,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் ; மத்திய சுகாதாரதுறை

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020
Share
Advertisement

புதுடில்லி : இந்தியாவில் மஹாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் இருந்து சுமார் 50,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தற்போது தீவிரமடைந்து வருகிறது. கொரோனா சோதனையை அதிகரிப்பதால் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ஆயினும் அரசின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் மீட்பு விகிதம் உயர்ந்து வருகிறது. இந்தியாவின் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 5,000 க்கும் குறைவான கொரோனா பாதிப்புகள் பதிவாகின. நாட்டில் 4 முக்கிய மாநிலங்களில் இருந்து மட்டும் 50,000 க்கும் மேற்பட்ட நோய் தொற்றுகள் பதிவாகியதாகவும், நாட்டின் எண்ணிக்கை 4.9 மில்லியனை கடந்ததாகவும் மத்திய சுகாதாரதுறை இன்று (செப்.,15) தெரிவித்தது.


latest tamil news



கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றுக்கு 83,809 பேர் பாதிக்கப்பட்டனர். 1,054 பேர் பலியாகினர். இதுவரை கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,930,236 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 80,776 ஆகவும் உயர்ந்தது. தற்போது 9,90,061 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவில் இருந்து 38,59,399 நோயாளிகள் மீட்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன, அங்கு மொத்தமாக 5,000 க்கும் குறைவான பாதிப்புகள்உள்ளன. மொத்தம் 5,000 முதல் 50,000 வரை பாதிப்புகள் உள்ள 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன என்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்தார்.


latest tamil news



இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இந்தியாவில் மஹாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் இருந்து சுமார் 50,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன. நாட்டின் மொத்த கொரோனா நோய் பாதிப்புகளில், 60 சதவீதம் 5 மாநிலங்களில் [ மகா., கர்நாடகா, ஆந்திரா, உ.பி., மற்றும் தமிழ்நாடு ] உள்ளன. முதல் ஐந்து மாநிலங்களில் தினசரி சராசரி இறப்புகளுடன் மகாராஷ்டிரா முன்னணியில் உள்ளது.

அமெரிக்காவிற்குப் பிறகு உலகில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நாடு இந்தியா, அதைத் தொடர்ந்து பிரேசில் உள்ளது. இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X