வெங்காய ஏற்றுமதி தடையால் பாக்.,க்கு லாபம்: சரத்பவார்

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (42)
Share
Advertisement
Sharad Pawar, rethink ban,export of onions, Pakistan, வெங்காயம், பாகிஸ்தான்

புதுடில்லி: வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு விதித்துள்ள தடையால், பாகிஸ்தானுக்கு லாபம் என தேசியவாத காங்., கட்சி தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.

மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த சரத்பவார் வெங்காய ஏற்றுமதிக்கு விதித்த தடை உத்தரவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: இந்திய வெங்காயத்துக்கு சர்வதேச சந்தையில் அதிக தேவை உள்ளது. வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பதால், இந்தியா மீதான நம்பகத்தன்மை சர்வதேச அளவில் பாதிக்கப்படும். இது பாகிஸ்தான் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு லாபம். இவ்வாறு அவர் கோரிக்கை விடுத்தார்.


latest tamil news


பியூஷ் கோயலுடனான சந்திப்பு குறித்து சரத்பவார் டுவிட்டரில், 'அமைச்சகங்களுடன் ஆலோசித்து வெங்காய ஏற்றுமதி தடையை மறுபரிசீலனை செய்வதாக பியூஷ் கோயல் உறுதியளித்துள்ளார். நாட்டில் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு வரலாம் என, நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகம் முன்மொழிந்ததால், தடை விதிக்கப்பட்டுள்ளது' என பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ram, nigeria - Lagos,நைஜீரியா
16-செப்-202010:04:18 IST Report Abuse
ram, nigeria " வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பதால், இந்தியா மீதான நம்பகத்தன்மை சர்வதேச அளவில் பாதிக்கப்படும்" இது எப்படி சத்தியம் ஆகும் ? தடை விதித்தது நம் அரசு தானே ? நம்பக தன்மை எப்படி பாதிக்கப்படும் ? சுத்தமான உளறல்
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
16-செப்-202009:49:55 IST Report Abuse
vbs manian இந்த புண்ணியவான் உணவு அமைச்சராக இருந்த பொது சக்கரை விலை உள்நாட்டில் வேகமாக உயர்ந்த பொது அதை ஏற்றுமதி செய்தார். கேட்டல் அகில உலக வர்த்தக ஒப்பந்தம் கட்டுப்படுத்துகிறது என்றார். கோதுமை விலை உயர்ந்த பொது தென்னிந்தியர்கள் அதிக அளவில் கோதுமையை சாப்பிட தொடங்கியதுதான் காரணம் என்றார்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
16-செப்-202009:32:05 IST Report Abuse
sankaseshan இவ்வளவு விஷயம் மணி எந்த புல்லை சாப்பிட்டு தெரிந்து கொண்டார் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X