படப்பிடிப்பில் விபத்து: தெய்வீக சக்தியால் உயிர்தப்பியதாக நடிகர் ஜாக்கி சான் பேட்டி| Dinamalar

படப்பிடிப்பில் விபத்து: தெய்வீக சக்தியால் உயிர்தப்பியதாக நடிகர் ஜாக்கி சான் பேட்டி

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (11)
Share
Jackie Chan survives yet another major life threatening accident while filming his new movie

பீஜிங் : பிரபல நடிகர், ஜாக்கி சான்,66 நடித்த, 'வான்கார்டு' என்ற திரைப்படம், வரும், 30ம் தேதி, வெளியாகிறது. இதையொட்டி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், படப்பிடிப்பு அனுபவங்களை, ஜாக்கி சான் பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:

வான்கார்டு படம், துபாய், தைவான் உள்ளிட்ட நாடுகளில் எடுக்கப்பட்டது. இந்த படத்திலும், வழக்கம் போல சண்டை காட்சிகளில் பல விபத்துக்களை சந்தித்தேன். அவற்றில் நீரில் மூழ்கிய விபத்து மறக்க முடியாதது. 'ஜெட்ஸ்கை' எனப்படும், ஒருவகை படகில் நடிகை, மியா முகியுடன் வேகமாக செல்லும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது, ஒரு சிறிய பாறையில் இடித்து படகு கவிழ்ந்தது. நான் நீரில் மூழ்கினேன்.


latest tamil newsஅதன் பின் நடந்ததை படக் குழுவினர் தான் தெரிவித்தனர். நீரில் மூழ்கியதும், மியா முகி உடனே, மேலே வந்து விட்டார். நான், படகுடன் இணைக்கப்பட்டிருந்ததால், வெளிவர முடியமல், 47 வினாடிகள் வரை நீரில் மூழ்கியிருந்திருக்கிறேன். ஏதே ஒரு தெய்வீக சக்தி என்னை காப்பாற்றியுள்ளது. என்னையும் அறியாமல், படகுடன் இருந்த தொடர்பை விடுவித்துக் கொண்ட உடன், தன்னிச்சையாக கடல் மட்டத்திற்கு மேலே வந்துள்ளேன்.

அதுவரை என்னை காணாததால், படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலே வந்தபின், இயக்குனர், ஸ்டான்லி டாங் கண்ணிர் நீர் கசிய என்னை கட்டித் தழுவி கொண்டார்.
இவ்வாறு ஜாக்கி சான் தெரிவித்தார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X