கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் முந்துகிறது இந்தியா: பில் கேட்ஸ்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் முந்துகிறது இந்தியா: பில் கேட்ஸ்

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (4+ 4)
Share
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் முந்துகிறது இந்தியா  சபாஷ்! :  மருந்து தயாரிப்பில் ஒத்துழைப்பு கேட்கிறார் பில் கேட்ஸ்

புதுடில்லி : 'கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு வகிக்க இந்தியா சுயமாக முன்வந்துள்ளதற்கு பாராட்டுகள். தடுப்பூசி தயாரிப்பிலும் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும். அப்போது தான், வளர்ந்து வரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு அதிக தடுப்பூசிகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்' என, 'மைக்ரோசாப்ட்' நிறுவனர் பில் கேட்ஸ் குறிப்பிட்டார்.
கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. தற்போது, இறுதிக்கட்ட பரிசோதனைகள் நடந்து வருகின்றன.இதற்கிடையே, மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனரான பில் கேட்ஸ், உலகின் மிகப் பெரிய நன்கொடையாளராகவும் உள்ளார். அவரும், அவருடைய மனைவி மெலிந்தா கேட்சும் இணைந்து நடத்தும் அறக்கட்டளை,உலகெங்கும் பல்வேறு சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தற்போது கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்பு மற்றும் உலகெங்கும் அது சென்றடைவதற்கு, இந்த அறக்கட்டளை பெரிய அளவில் நன்கொடை அளித்துள்ளது.இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், பில் கேட்ஸ் கூறியுள்ளதாவது:உலகப் போருக்கு பின், உலகம் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்னையாக, கொரோனா வைரஸ் பரவல் உள்ளது. இந்த வைரசுக்கு எதிராக, அனைத்து உலக நாடுகளும் போராடி வருகின்றன. குறிப்பாக, இந்தியாவின் பங்கு இதில் மிகவும் பாராட்டக் கூடியதாக உள்ளது.
பரிசோதனைகள்வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து, தடுப்பூசி கண்டுபிடிப்பது வரை, சுயமாக முன்வந்து, உலக நாடுகளில் மிக முக்கியமான இடத்தில் இந்தியா உள்ளது. தடுப்பூசி தயாரிப்பதற்கான முயற்சிகளிலும், மற்ற நாடுகளை இந்தியா முந்துகிறது. இங்கு பல்வேறு தடுப்பூசிகளுக்கான பரிசோதனைகள் நடந்து வருகின்றன.அதேபோல் மருந்து தயாரிப்பிலும், இந்தியா தலைமையேற்க வேண்டும். இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கப்படுவதை, பல நாடுகளும் விரும்புகின்றன.
மிகவும் பாதுகாப்பான தடுப்பூசி வெளியான பின், மிக அதிக அளவில் உற்பத்தி செய்யும் என, இந்தியாவை உலக நாடுகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளன.தற்போதைய நிலையில், பல்வேறு தடுப்பூசிகள் பரிசோதனையில் உள்ளன. அடுத்தாண்டு துவக்கத்தில், இவை கடைசி கட்ட பரிசோதனையில் ஈடுபடுத்தப்படும்.

அதன்பிறகு, தடுப்பூசி தயாரிப்பதற்கான பணிகள் துவக்கப்பட வேண்டும். இதுவரை நடந்துள்ள பரிசோதனைகள் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன.தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும், வைரசால் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளவர்களை முதலில் சென்றடைய வேண்டும். வளர்ந்த, பணக்கார நாடுகளுக்கு கிடைப்பதைவிட, வளர்ந்து வரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு கிடைக்க வேண்டும். தன் தேவைக்காக மட்டுமல்லாமல், இதுபோன்ற நாடுகளுக்கும் இந்தியா மருந்து களை அனுப்பி வைத்து உதவும்.ஆக்ஸ்போர்டு பல்கலை உருவாக்கியுள்ள தடுப்பூசியை, இந்தியாவில் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை, 'சீரம்' நிறுவனம் பெற்றுள்ளது.


அறக்கட்டளைஅந்த நிறுவனத்துக்கு எங்களுடைய அறக்கட்டளை உதவி வருகிறது. அதுபோல், இந்தியாவில் மற்ற தடுப்பூசிகளை தயாரிப்பதற்கும் உதவுவோம். அதற்காக, பல்வேறு தரப்பினருடன் பேசி வருகிறோம்.இந்திய அரசு மற்றும் அமைப்புகளுடன் இதுவரை நடத்திய பேச்சுகளில் இருந்து, அவர்களுடைய ஆர்வம், உலக நாடுகள் மீதான அக்கறையை புரிந்து கொண்டுள்ளோம். அதற்காக பாராட்டு தெரிவிக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


நம்பிக்கை அளிக்கிறதுராஜ்யசபாவில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அஸ்வினி சவுபே, எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:கொரோனாவுக்கு எதிராக, இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் 'பாரத் பயோடெக்' நிறுவனம் இணைந்து ஒரு தடுப்பூசியையும், 'கெடிலா ஹெல்த்கேர்' நிறுவனம் ஒரு தடுப்பூசியை யும் உருவாக்கியுள்ளன. இவற்றுக்கான இரண்டாம் கட்ட பரிசோதனை நடந்து வருகிறது.முதல்கட்ட பரிசோதனை முடிவு மிகவும் திருப்திகரமாக உள்ளது. அந்த தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை என்பது தெரியவந்துள்ளது. இதைத் தவிர, சர்வதேச அளவிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரண்டு தடுப்பூசிகளுக்கான பரிசோதனையும், நம் நாட்டில் நடந்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


மத்திய அரசுக்கு பாராட்டுதன் பேட்டியில், பில் கேட்ஸ் மேலும் கூறியுள்ள தாவது:இந்தியாவில், 'டிஜிட்டல்' முறையிலானபணப்பரிமாற்றம் செய்வது அதிகரித்து வருவது பாராட்டுக்குரியது. பல்வேறு மானியங்கள், அரசின் உதவிகள், டிஜிட்டல் முறையில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் முயற்சி, மிகவும் சிறந்த திட்டமாகும். இந்த முறையை, உலக நாடுகள் பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X