அடக்குமுறையை ஏவும் சீனா; 70களில் தப்பிச் சென்ற சீனர்களுக்கு சிக்கல்| Dinamalar

அடக்குமுறையை ஏவும் சீனா; 70களில் தப்பிச் சென்ற சீனர்களுக்கு சிக்கல்

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (3)
Share
ஹாங்காங்: ஹாங்காங்வாசிகள் தற்போது சீன அரசால் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.எழுபதுகளில் மா சேடாங் ஆட்சிக்காலத்தில் சீனாவிலிருந்து ஹாங்காங்குக்கு குற்றவாளிகள் பலர் தப்பியோடினர்.சிறிய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் முதல் பெரிய கடத்தல் விஷயங்களில் ஈடுபட்ட பலர் அப்போது சீனாவின் நீதிமன்ற தீர்ப்பு, மரணதண்டனை உள்ளிட்டவற்றுக்கு பயந்து கடல் வழியாக ஹாங்காங்குக்குத்
Hong Kong, safe haven, China, boat, Taiwan

ஹாங்காங்: ஹாங்காங்வாசிகள் தற்போது சீன அரசால் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.எழுபதுகளில் மா சேடாங் ஆட்சிக்காலத்தில் சீனாவிலிருந்து ஹாங்காங்குக்கு குற்றவாளிகள் பலர் தப்பியோடினர்.

சிறிய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் முதல் பெரிய கடத்தல் விஷயங்களில் ஈடுபட்ட பலர் அப்போது சீனாவின் நீதிமன்ற தீர்ப்பு, மரணதண்டனை உள்ளிட்டவற்றுக்கு பயந்து கடல் வழியாக ஹாங்காங்குக்குத் தப்பிச்சென்றனர். மேலும் அப்போது சீனாவில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தால் பலர் அங்கு குடிபெயர்ந்தனர்.

தங்களது இருபத்தைந்தாவது வயதில் ஹாங்காங்குக்கு குடிபெயர்ந்த பலர் பலருக்கு தற்போது 50 வயதிற்கு மேல் ஆகிறது பிரிட்டன் காலனியாக இருந்த ஹாங்காங்கில் இவர்கள் பல ஆண்டுகாலமாக சுதந்திரமாக ஜனநாயக ஆட்சியில் வாழ்ந்து பழகி விட்டனர். 1997 ஆம் ஆண்டு பிரிட்டன் தனது காலனி ஆதிக்கத்தை ஹாங்காங்கில் இருந்து மீண்டும் எடுத்துக்கொண்டது.


latest tamil newsபின்னர் 'ஒரு நாடு இரு சட்டம்' என்ற முறையில் ஹாங்காங், சீனா ஆகிய நாடுகள் நிர்வகிக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் அராஜகத்துக்கு பயந்து எழுபது, எண்பதுகளில் ஆங்காங்கு குடிபெயர்ந்த சீனர்களின் நிலைமை கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

இவர்கள் மீது தற்போது சீனா கடும் அடக்குமுறையை ஏவி வருகிறது. இவர்கள் பல ஆண்டு காலமாக ஹாங்காங்கில் வசித்து வருவதால் இவர்களுக்கு பிரிட்டனில் குடியேற குடியுரிமை எளிதில் கிடைக்கும். எனவே இவர்களில் பலர் பிரிட்டனுக்கு குடிபெயர முயன்று வருகின்றனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X