பொது செய்தி

இந்தியா

கொரோனா மீட்பு விகிதம் 78.28 சதவீதமாக உயர்வு

Added : செப் 15, 2020
Share
Advertisement

புதுடில்லி:கடந்த, 24 மணி நேரத்தில், 83 ஆயிரத்து, 809 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து, மீண்டோர் விகிதம், 78.28 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து, மத்திய சுகாதார அமைச்சகம், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த, 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றை கண்டறிய, 10.73 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவில், 83 ஆயிரத்து, 809 பேரிடம், பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.இவர்களுடன், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 49 லட்சத்து, 30 ஆயிரத்து, 236 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், 9.90 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது, ஒட்டுமொத்த பாதிப்பில், 20.08 சதவீதமாகும்.

மத்திய, மாநில அரசுகளின் தொடர் சிகிச்சை வாயிலாக, நேற்று வரை, 38.59 லட்சம் பேர், நோய் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்; குணமடைந்தோர் விகிதம், 78.28 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த, 24 மணி நேரத்தில், மஹா.,வில், 363 பேர், கர்நாடகாவில், 119; பஞ்சாபில், 68; உ.பி.,யில், 62; ஆந்திராவில், 60; மே.வங்கத்தில், 58; தமிழகத்தில், 53; ம.பி.,யில், 29; டில்லியில், 26; ஹரியானாவில், 25 பேர் உட்பட, 1,054 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துஉள்ளனர். இவர்களுடன், நேற்று வரை பலியானோர் எண்ணிக்கை, 80 ஆயிரத்து, 776 ஆக அதிகரித்துள்ளது; இறப்பு விகிதம், 1.64 ஆக குறைந்துள்ளது.

ஒட்டுமொத்த பலியில், 29 ஆயிரத்து, 894 பேருடன், மஹா., முதலிடத்தில் உள்ளது. தமிழகம், 8,434 பேருடன் இரண்டாம் இடத்திலும், கர்நாடகம், 7,384 பேருடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


கண்காணிப்பில் 40 லட்சம் பேர்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர், அஸ்வினி சவுபே, நேற்று ராஜ்யசபாவில் கூறிய தாவது:கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோருக்கு, 15 ஆயிரத்து, 290 மையங்களில், சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு, 13.14 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க, தனிமைப் படுத்தப்பட்ட வசதி உள்ளது.

நாட்டில், 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளன. மூன்று நிறுவனங்கள், இரண்டு மற்றும் மூன்றாம் நிலையை எட்டியுள்ளன. வைரஸ் பரவலை கண்டறிய, 40 லட்சம் பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X