பொது செய்தி

தமிழ்நாடு

நீர் நிலைகளை நேசிக்கும் கண்ணம்பாக்கம் ஊராட்சி

Added : செப் 15, 2020
Share
Advertisement

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே, ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள கண்ணம்பாக்கம் ஊராட்சியில், புறாக்குளம்,வேப்பங்குளம், அனுமடகு குளம், அத்திரெட்டி குளம், ஜெமினி குளம், சின்னபுறா குளம் ஆகிய குளங்கள் உள்ளன. மேலும், பொதுப்பணித் துறை பராமரிப்பில் பெரிய ஏரியும், ஒன்றிய நிர்வாக பராமரிப்பில் புது ஏரியும் உள்ளது.

மேற்கண்ட அனைத்து நீர் நிலைகள் மற்றும் நீர் வழித் தடங்களை முறையாக பராமரித்து, ஆக்கிரமிப்பு ஏதும் நடைபெறாமல், கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.சமீபத்தில், 6.45 லட்சம்ரூபாய் செலவில், ஜெமினி குளம் சீரமைப்பு பணிகளை, கண்ணம்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் சார்பில், மேற்கொள்ளப்பட்டது.குளத்தை சுற்றி அமைக்கப்பட்ட தடுப்பு சுவற்றில், கண்கவர் வண்ணங்களில் வர்ணம் தீட்டப்பட்டு உள்ளன.

நீர் நிலைகளை நேசித்ததன் காரணமாக, குளத்தை அழகுபடுத்தியதாக ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ் தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில், 'அடுத்த கட்டமாக, எங்கள் கிராமத்தில், எப்போதும் நீர் வற்றாத புறாக்குளத்தை சீரமைத்து, அதில் படகு குழாம் அமைக்கும் முயற்சியை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.'அதன் மூலம், ஊராட்சிக்கு வருமானம் கிடைக்க வழி செய்யப்படும்' என, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X