சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : செப் 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

பெட்ரோல் விற்றவர் கைது

ஊத்துக்கோட்டை: பூண்டி ஒன்றியம், சென்றாயன்பாளையம் கிராமத்தில் கள்ளத்தனமாக பெட்ரோல் விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. பென்னலுார்பேட்டை போலீசார் அப்பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது. ஒரு பெட்டிக் கடையில் கள்ளத்தனமாக பெட்ரோல் விற்பது தெரியவந்தது. இதுகுறித்து, பென்னலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, இரண்டு லிட்டர் பெட்ரோலை பறிமுதல் செய்தனர். மேலும், கடை உரிமையாளர் ரஞ்சிதம் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

டூ - வீலர் திருடியவர்கள் கைது

திருத்தணி: திருத்தணி நகராட்சி, மேல்திருத்தணி மற்றும் ராஜிவ் காந்தி நகர் ஆகிய பகுதிகளில், கடந்த, 13ம் தேதி இரவு, வீடுகள் முன் நிறுத்தியிருந்த, மூன்று இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.இதையடுத்து, வாகன உரிமையாளர்கள் கொடுத்த புகாரின்படி, திருத்தணி குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை, தனிப்படை போலீசார், மேல்திருத்தணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகிக்கும்படி சுற்றித் திரிந்த இரண்டு சிறுவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், திருத்தணியைச் சேர்ந்த, 17 வயது சிறுவர்கள் இருவர், மூன்று இருசக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக் கொண்டனர். பின், போலீசார் மூன்று வாகனங்களையும் பறிமுதல் செய்து, சிறுவர்களை சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.

4 ஊழியர்கள் காயம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தில் தனியார் இரும்பு உருக்கு ஆலை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு, இரும்பு உருக்கும் பாய்லர் பிரிவில், உ.பி.,யைச் சேர்ந்த நிக்கான், 30, சாகர் 45, பீஹாரை சேர்ந்த குந்தன் குமார், 22, நந்தன், 20 ஆகியோர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, பாய்லரில் கொதித்த இரும்பு குழம்பு தெறித்து விழுந்ததில், நான்கு பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.இதையடுத்து, நான்கு பேரையும் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், இருவர் சிகிச்சை பெற்று திரும்பினர். இருவர், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பெருநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குண்டாசில் மூவர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பகுதியில், கஞ்சா, வழிப்பறி மற்றும் கொலை வழக்குகளில் தொடர்புடைய, மாமண்டூர் சிலம்பரசன், 30, இருங்குன்றபள்ளி விஜயகுமார், 45, பீடிநகர் அக்பர் அலி, 29, ஆகியோரை, செங்கல்பட்டு தாலுகா போலீசார், கைது செய்து, சிறையில் அடைத்தனர்.தொடர்ந்து, மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் ஜான்லுாயிஸ், நேற்று உத்தரவிட்டார். பின், புழல் சிறையில் உள்ள அவர்களிடம், குண்டர் சட்ட நகலை போலீசார் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
17-செப்-202001:03:42 IST Report Abuse
தல புராணம் லஞ்சம் எவ்வளவு வசூல்ன்னு டைரியில் குறிக்க மாட்டார்களா??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X