சிவசேனாவிடம் அடி,உதை வாங்கியவர் பா.ஜ.,வில் இணைந்ததாக அறிவிப்பு

Updated : செப் 16, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
Shiv Sena, BJP,  RSS, Ex Navy Man, Attacked, Cartoon, சிவசேனா, அடி, உதை, பாஜ, அறிவிப்பு

மும்பை : மஹா.,வின் மும்பையில், சிவசேனா தொண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளான, முன்னாள் கடற்படை வீரர், பா.ஜ.,வுடன் இணைந்ததாக கூறியுள்ளார்.

மஹா.,வில், முதல்வர், உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்துள்ளது. இம்மாநில தலைநகர் மும்பையில் வசிக்கும், முன்னாள் கடற்படை வீரர் மதன் ஷர்மா, 62, முதல்வர், உத்தவ் தாக்கரே பற்றி, 'வாட்ஸ் ஆப்'பில் வந்த 'கார்ட்டூனை' மற்றவர்களுக்கு அனுப்பியதால், சிவசேனா தொண்டர்கள், அவரை தாக்கினர்.

இதுதொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கவர்னர், பகத் சிங் கோஷ்யாரிடம், நேற்று மதன் ஷர்மா மனு அளித்தார். இதுகுறித்து, மதன் ஷர்மா கூறியதாவது:

என்னை தாக்கிய சிவசேனா அமைப்பினர், நான் பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக கூறினர். இன்று முதல், நான் அவர்களுடன் இணைந்துள்ளேன். என் மீது, சிவசேனா தொண்டர்கள் தாக்குதல் நடத்திய பின், என்னை கைது செய்ய போலீசார் முயன்றனர்.

இதில் உரிய நடவடிக்கை எடுக்க, மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, கவர்னரிடம் கோரியுள்ளேன். தாக்குதலில் காயமடைந்த என்னிடம், ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் தொலைபேசியில் நலம் விசாரித்தார். மத்திய இணை அமைச்சர், ராம்தாஸ் அதாவலே, நேரில் ஆறுதல் கூறினார். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian Ravichandran - Chennai,இந்தியா
16-செப்-202020:45:46 IST Report Abuse
Indian  Ravichandran மார்ட்டியத்தில்தான் விவாசியிகள் தற்கொலை அதிகம் அத்தனை கஷ்ட்டம் முதலில் அவங்கள பொய் காப்பாத்துங்கடா சேனா குரூப்ஸ், மொத்தமா சேர்ந்துக்கிட்டு ஒருத்தனை அடிக்கிற வீரன்ஸ்.
Rate this:
Cancel
N.Murugan - Nagercoil,இந்தியா
16-செப்-202011:45:46 IST Report Abuse
N.Murugan ஐ எ எஸ் ஐ பி எஸ் அதிகாரிகள் பி ஜே பி சேர்க்க நல்ல விதமான முறை கையாளுகிறது
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
16-செப்-202009:56:04 IST Report Abuse
vbs manian இந்த அமைப்பை எதிர்த்தால் யாரும் மும்பையில் நிம்மதியாக வாழ முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X