சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முக கவசம் அணியாத 1,500 பேருக்கு அபராதம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

திருத்தணி : திருத்தணி நகராட்சியில், முக கவசம் அணியாமல் சுற்றித் திரிந்தவர்கள்மற்றும் கடைக்காரர்கள் என, 1,500 பேருக்கு அபராதம் விதித்து, வசூலிக்கப்பட்டது.

திருத்தணி நகராட்சியில், ஜூன் மாதம் முதல், கொரோனா தொற்று பரவ துவங்கியதில், நேற்று வரை, 530 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இவர்களில், 480 பேர் சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பிய நிலையில், 12 பேர் இறந்தனர். தற்போது, 38 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், நகராட்சி நிர்வாகம், முக கவசம் அணியாமல் நடமாடுபவர்கள் மற்றும் கடை வியாபாரிகளுக்கு, 100 - 200 ரூபாய் வரை அபராதம் வசூலித்து வந்தது.

இந்நிலையில், நேற்று வரை, ஒன்றரை மாதத்தில்மட்டும், முக கவசம் அணியாமல், நகரில் சுற்றித் திரிந்தவர்கள், கடைக்காரர்கள் என, 1,500 பேரிடம்நகராட்சி ஊழியர்கள் அபராதம் வசூலித்தனர்.இதன் மூலம் நகராட்சிக்கு, 1.50 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என, ஆணையர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X