பொது செய்தி

தமிழ்நாடு

கேரளத்திற்கு பயணமாகும் பழவேற்காடு சூறை மீன்கள்

Added : செப் 15, 2020
Share
Advertisement

பழவேற்காடு: கடலில் மீன் பிடிக்கச்செல்லும் மீனவர்கள் வலையில், அதிக அளவில்,கிடைக்கும் 'சூறை'மீன்கள், கேரள மாநிலத்திற்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

பழவேற்காடு கடலில், மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் வலையில், சில தினங்களாக சூறை மீன்கள் அதிக அளவில் கிடைத்து வருகின்றன. ஒவ்வொன்றும், 2 - 3 கிலோ வரை எடையுள்ளதாக இருக்கிறது.இந்த வகை மீன்களுக்கு, கேரள மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. மொத்த வியாபாரிகள் அவற்றை வாங்கி, பதப்படுத்தி, விற்பனைக்காக கேரளாவிற்கு அனுப்புகின்றனர். அங்குள்ள நிறுவனங்கள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றன.

படகுகளில் இருந்து சூறை மீன்களை இறக்குவது, எடை போடுவது,ஐஸ்போட்டு பதப்படுத்துவது என, மீன் இறங்குதளம் பரபரப்பாக காணப்படுகிறது.சில தினங்களாக, அதிக விசைத்திறன் கொண்ட படகுகளை பயன்படுத்தி கடலுக்குச் சென்று, கரை திரும்பும் மீனவர்கள், ஒவ்வொரு படகிலும், ஒரு டன் எடை வரை மீன்களை கொண்டு வருகின்றனர்.மீனவர்கள் குழுவாக சென்று கடலில் சூறை மீன்களை பிடித்து, கிடைக்கும் வருவாயில் அனைவரும் பகிர்ந்து கொள்கின்றனர்.சூறை மீன்கள் வரத்தால், மீனவர்கள் ஓரளவு வருவாய் ஈட்டி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X