காங்., பொதுச் செயலர் பிரியங்கா அமெரிக்கா செல்லாதது ஏன்?

Added : செப் 15, 2020
Share
Advertisement

புதுடில்லி:காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்காவின் வீட்டில் சமையல் செய்பவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொண்டதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே, தன் தாய் சோனியாவுடன், அவர் அமெரிக்கா செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் சோனியா, வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக, சமீபத்தில் அமெரிக்கா சென்றார். அவரது மகனும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல், உடன் சென்றார். முன்னதாக, சோனியாவுடன், அவரது மகள் பிரியங்கா தான் அமெரிக்கா செல்லஉள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அவருக்கு பதிலாக ராகுல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:பிரியங்காவின் வீட்டில் சமையல்காரராக பணியாற்றியவருக்கு, சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பிரியங்காவும், அவரது குடும்பத்தினரும், வீட்டில் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்தி உள்ளனர். இதன் காரணமாகவே, கடைசிநேரத்தில், சோனியாவுடன், ராகுல், அமெரிக்காவுக்குச் சென்றார். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X