பொது செய்தி

தமிழ்நாடு

மணவாள நகரில் பயன்பாடில்லாத ஏ.டி.எம்.,

Added : செப் 15, 2020
Share
Advertisement

மணவாள நகர் : மணவாள நகரில், பயன்பாடில்லாத ஏ.டி.எம்., பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சி, மணவாள நகரில், இந்திரா காந்தி சிலை அருகே, பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்., உள்ளது. இந்த ஏ.டி.எம்.,மை மணவாள நகர் மற்றும் அதை சுற்றியுள்ள மேல்நல்லாத்துார், பட்டரை, அதிகத்துார், கீழ்நல்லாத்துார் உட்பட, 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ஏ.டி.எம்.,மில் பணம், எடுக்க இரண்டு இயந்திரங்கள் உள்ளன. இதில், ஒரு இயந்திரம் பழுதடைந்ததால், புதியதாக வந்த இயந்திரமும் காட்சி பொருளாகவே உள்ளது.தற்போது, மற்றொரு இயந்திரம் பயன்பாடில்லாமல் உள்ளது. இதனால், ஒரு வாரமாக பொதுமக்கள் ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும், வங்கியில் எவ்வித விளக்குகளும் இல்லாமல் இருளிலேயே மூழ்கி கிடக்கிறது. வங்கி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து ஏ.டி.எம்., பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X