பாக்., உளவாளிகளுக்கு பணம் குஜராத் வியாபாரி அதிரடி கைது

Added : செப் 15, 2020
Share
Advertisement

புதுடில்லி:பாக்., உளவாளிகளுக்கு பணப் பட்டுவாடா செய்த குற்றச்சாட்டில், குஜராத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., சமூக வலைதளங்கள் மூலம், இந்திய கடற்படை வீரர்கள் சிலரை வளைத்து, கடற்படை ரகசியங்களை பெற்றுள்ளதை, தேசிய புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்தது. பணம் பட்டுவாடாஇது தொடர்பாக, விசாகப்பட்டினம் கடற்படை பிரிவைச் சேர்ந்தவர்கள் உட்பட, 14 பேர் மீது, தேச விரோத வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

உளவு தகவல்களை சொன்னவர்களின் வங்கிக் கணக்கில், இந்தியாவில் உள்ள தங்கள் ஏஜென்ட்டுகள் மூலம், ஐ.எஸ்.ஐ., பணம் பட்டுவாடா செய்து உள்ளது. இதன்படி, குஜராத்தைச் சேர்ந்த, ஜவுளி வியாபாரி, ஜிதலி இம்ரான், உளவு தகவல்களை கூறியவர்களின் வங்கிக் கணக்கில், அவ்வப்போது பணம் செலுத்தி வந்துள்ளதை, தேசிய புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்து உள்ளது.


முக்கிய ஆவணங்கள்

இவர், பாகிஸ்தானுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்து வருகிறார். வியாபாரி என்ற போர்வையில் இம்ரானை பயன்படுத்தி, இந்திய கடற்படையின் ரகசியங்களை, ஐ.எஸ்.ஐ., பெற்றுள்ளது. அதற்கான பணமும் அவர் மூலம் உளவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதையடுத்து, ஜிதலி இம்ரானை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். குஜராத்தில் உள்ள அவரது வீட்டில் சோதனை செய்து, ஐ.எஸ்.ஐ., உடன் வைத்திருந்த தொடர்புக்கான முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X