குஜராத் ஆயுர்வேத நிறுவனங்கள் தேசிய அந்தஸ்துக்கு மசோதா

Added : செப் 15, 2020
Share
Advertisement

புதுடில்லி:குஜராத்தில் உள்ள ஆயுர்வேத நிறுவனங்களுக்கு, தேசிய அந்தஸ்து வழங்குவதற்கான, ஆயுர்வேத நிறுவன மசோதா, ராஜ்யசபாவில் செய்யப்பட்டது.

குஜராத்தில் உள்ள ஆயுர்வேதப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் முதுகலை ஆயுர்வேதப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஆயுர்வேத மஹாவித்யாலயா, ஆயுர்வேத மருந்துகள் நிறுவனம் ஆகியவற்றை ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேத பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒன்றிணைக்க, இந்த மசோதா வழிவகை செய்கிறது.அந்த நிறுவனங்களுக்கு, தேசிய அந்தஸ்து வழங்கவும், மசோதா வழிவகை செய்கிறது.

இந்த மசோதா கடந்த மார்ச் மாதம், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த மசோதாவை, ராஜ்சபாவில், மத்திய சுகாதாரத்தறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், நேற்று தாக்கல் செய்தார். அப்போது. அவர் பேசியதாவது:ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அது தொடர்பான கல்வியை மேம்படுத்தும் நோக்கில் தான் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டில், தேசிய அந்தஸ்து பெற உள்ள முதல் ஆயுர்வேத நிறுவனம் இதுதான். இவ்வாறு, அவர் பேசினார்.

மசோதா மீது நடந்த விவாதத்தில் காங்., உறுப்பினர் ஹனுமந்தையா பேசியதாவது:நம் நாட்டின் பாரம்பர்ய மருத்துவ முறை, ஆயுர்வேதம். இந்த சிகிச்சை முறைக்கு, கர்நாடகாவும், கேரளாவும் தான் பெயர் பெற்றவை. திருவனந்தபுரத்தில், ஆயுர்வேத கல்லூரி, 1889ல் நிறுவப்பட்டது. ஆனால், ஜாம்நகரில், 1952ல் தான் துவக்கப்பட்டது. அப்படியிருக்கையில், குஜராத்துக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது ஏன்...

தமிழகத்தில் சித்த மருத்துவம் மிகவும் பிரபலமானது. அங்கு, சித்த மருத்துவ நிறுவனங்களுக்கு தேசிய அந்தஸ்து வழங்க வேண்டும்.குஜராத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது போல், கேரளா, கர்நாடகம், தமிழகம் ஆகியவற்றிலும் வழங்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X