சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சடாச்சிவாக்கத்தில் அரசு நிலம் விற்பனை; வருவாய் துறையினர் அசட்டை என புகார்

Added : செப் 15, 2020
Share
Advertisement

உத்திரமேரூர் : சடாச்சிவாக்கத்தில், அரசு புறம்போக்கு நிலம் பங்கு போட்டு விற்பனை செய்வதை, வருவாய் துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதாக, பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

உத்திரமேரூர் ஒன்றியம்,வாடாதவூர் ஊராட்சிக்கு உட்பட்டது சடாச்சிவாக்கம் கிராமம். இக்கிராமத்தில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை சுற்றிலும் பல ஏக்கர் பரப்பில், அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது.இந்நிலத்தை, இப்பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட சிலர், பங்கு போட்டு,சென்னை உள்ளிட்ட வெளி மாவட்ட நபர்களுக்கு, தொடர்ந்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.பெரும்பாலான நிலப் பகுதி விற்பனையாகிவிட்ட நிலையில், மீதமுள்ள நிலத்தையாவது பாதுகாக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, சடாச்சிவாக்கம் நாகபூஷனம் என்பவர் கூறியதாவது:அரசு நிலத்தை விற்பனை செய்யும் சமூக விரோத செயல் குறித்து, வருவாய்த் துறை அதிகாரிகளிடத்தில் கூறியும் நடவடிக்கை எடுக்காமல், அசட்டையாக உள்ளனர்.அரசு நிலத்தை விற்பனை செய்வது தவறு என, சிலர் தட்டிக்கேட்டனர்.

தட்டிக்கேட்ட ஆறு நபர்களின் குடும்பத்தினரை, கோவில் நிகழ்ச்சியில் வழிபாடு மேற்கொள்ள அனுமதிக்காத கொடுமையும் நடந்து உள்ளது.எனவே, மேய்க்கால் புறம்போக்கு நில விற்பனை மற்றும் பொதுக்கோவில் நிகழ்ச்சியில் குறிப்பிட்ட சிலரை புறக்கணிப்பு செய்வதை, அதிகாரிகள் தடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.கிராம நிர்வாக அலுவலர்குமார் கூறுகையில், ''சடாச்சிவாக்கத்தில் அரசு புறம்போக்கு நிலம், தனி நபர்களால் விற்பனை செய்யப்படுவது குறித்து, உயர் அதிகாரிகளுக்கு தெரியபடுத்தப்பட்டு உள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X