சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'கிசான்' திட்டத்தில், 7,064 பேர் முறைகேடு

Added : செப் 15, 2020
Share
Advertisement

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், 'கிசான்' திட்டத்தில், 7,064 பேர் முறைகேட்டில் ஈடுபட்டதாக, கலெக்டர் ஜான்லுாயிஸ் தெரிவித்தார்.

இது குறித்து, கலெக்டர் ஜான்லுாயிஸ் தெரிவித்ததாவது:மத்திய அரசின், பிரதமர் கிசான் திட்டத்தின் மூலம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு, 6,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதில், முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில், 7,064 பேர், போலியாக விவசாயி என பதிவு செய்துள்ளது தெரியவந்தது.

வேளாண், தோட்டக்கலை, வருவாய் மற்றும் காவல் துறை இணைந்து, போலி விவசாயிகளிடமிருந்து இதுவரை, 78 லட்சம் ரூபாய் வரை திரும்ப பெறப்பட்டு, அரசு கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது.மீதமுள்ள தொகைகளை திரும்ப பெற, வேளாண், தோட்டக்கலை, வருவாய்த் துறை அலுவலர்கள் குழு, குறுவட்ட வாரியாக அமைக்கப்பட்டு, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

பெண் கைது

இதேபோல, காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிரதம மந்திரி கவுரவ நிதி பெறுவதில், 2,712 போலி பயனாளிகளை சேர்த்திருப்பது, ஆய்வில் தெரியவந்தது.வேளாண் மற்றும் பல துறை அதிகாரிகளின் அறிவுரைபடி, போலி பயனாளிகளிடம் இருந்து, 59 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் முறையாக விசாரித்து வந்தனர்.

இதில், வாலாஜாபாத் வட்டாரத்தில், 'அட்மா' என அழைக்கப்படும், வேளாண் தொழில்நுட்ப ஊழியர் சத்யராஜ், 28, என்பவரை, 13ம் தேதி, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். மேலும், பல கணினி மைய நிர்வாகிகளை, போலீசார் விசாரித்தனர்.இதில், இடைத்தரகராக செயல்பட்ட, உளுந்துார்பேட்டையைச் சேர்ந்த லலிதா என்பவரை, நேற்று, போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X