உதான் விமான சேவை: தமிழக எம்.பி.,க்கள் வலியுறுத்தல்| Dinamalar

உதான் விமான சேவை: தமிழக எம்.பி.,க்கள் வலியுறுத்தல்

Added : செப் 15, 2020
Share

'சென்னை விமான நிலையத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்துவதோடு, தமிழகத்தின் முக்கிய நகரங்கள் அனைத்துக்கும், உதான் விமான போக்குவரத்து வசதியை ஏற்படுத்திதர வேண்டும்' என, தமிழக எம்.பி.,க்கள் கோரிக்கை வைத்தனர்.

விமானச் சட்டம் 1934ல், முக்கிய திருத்தங்களை செய்து, புதிய மசோதாவை மத்திய அரசு உருவாக்கியிருந்தது. நேற்று, ராஜ்யசபாவில் இம்மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று, அ.தி.மு.க.,- எம்.பி., தம்பிதுரை பேசியதாவது:நாடு முழுதும் விமானபோக்குவரத்து சேவையை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது வரவேற்கத்தக்கது தான்.


அரசு ஒப்புதல்

அதேவேளையில், தமிழகத்தில், பல முக்கிய நகரங்களுக்கு விமான சேவை தேவையாக உள்ளது. குறிப்பாக, தொழில் நகரமான ஓசூருக்கு விமான போக்குவரத்து மிகவும் அவசியம்.சிறு நகரங்களுக்கும் விமான சேவையை ஏற்படுத்தி தரும் உதான் திட்டத்தின் கீழ், ஓசூருக்கும் விமான சேவை ஏற்படுத்த, தமிழக அரசு ஒப்புதல் தந்துவிட்டது. இதை, மத்திய அரசு கண்டிப்பாக நிறைவேற்றி தர வேண்டும்.இவ்வாறு, தம்பிதுரை பேசினார்.

தி.மு.க., - எம்.பி., வில்சன் பேசியதாவது:விமானப் போக்கு வரத்து துறையை சீரமைக்காமல் விட்டதால் தான், பல முக்கிய தனியார் விமான நிறுவனங்கள் நஷ்டங்களை சந்தித்து, இத் துறையை விட்டே போய்விட்டன. மிகவும் அவசியம்கட்டணம் மற்றும் வழித்தடங்களை ஒழுங்கு படுத்தவில்லை எனில், சாதாரண மக்களுக்கு, விமானப்பயணம் சாத்தியமாகாது. இத்துறையும் லாபத்தை ஈட்டிவிடாது.சென்னை விமான நிலையத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்த வேண்டியது மிகவும் அவசியம்.

மதுரை, கோவை, திருச்சி போன்ற விமான நிலையங்களையும், தற்போது இருப்பதை காட்டிலும், மேலும் மேம்படுத்த நடவடிக்கைகள் தேவை.தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்கள் அனைத்துக்கும், உதான் விமான போக்குவரத்து சேவையை, உடனடியாக ஏற்படுத்தி தர, மத்திய அரசு முன்வர வேண்டும்.தேசிய நெடுஞ்சாலை சட்டத்தைப்போல, விமான நிலையங்களை விரைந்து அமைக்கத் தேவையான நிலத்தை கையகப்படுத்தவும் புதிய சட்டம் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு வில்சன் பேசினார்.

விவாதத்தின் முடிவில், இம்மசோதாவுக்கு, ராஜ்யசபா ஒப்புதல் தந்ததை அடுத்து, 'விமான சட்டம் 2020' என்ற புதிய சட்டம் பிறந்துள்ளது. புதிய சட்டம்விமானங்களின் உற்பத்தி, உடைமை, செயல்பாடு, விற்பனை மற்றும் விமானங்களை இயக்குவதற்கான உரிமை ஆகிவற்றை, இச்சட்டம் ஒழுங்குபடுத்தவுள்ளது.

மேலும், விமான போக்குவரத்து இயக்குனரகம், விமான போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனம், விமான விபத்து புலனாய்வு நிறுவனம் ஆகிய அனைத்தையும், சட்ட ரீதியிலான அமைப்பு களாக, இப்புதிய சட்டம் மாற்றப்போகிறது.

'நீட்' கொலைக்கருவியைஎப்போது கீழே போடுவீர்கள்?

லோக்சபாவில், மதுரை எம்.பி.,வெங்கடேசன் பேசியதாவது:'நீட்' எனும் திரிசூலத்தின் ஒருமுனை, மாநில கல்வி உரிமையை குத்தி கிழிக்கிறது. இன்னொரு முனை, 'டீச்சிங்கை' கொன்று, 'கோச்சிங்கை' கொண்டாடுகிறது. மற்றொரு முனை, உளவியலை சிதைத்து தற்கொலையை துாண்டுகிறது.

தமிழகத்தில், 12க்கும் மேற்பட்ட குழந்தைகளின் மரண துயரத்தில் இருந்து, கேட்கிறோம். நீட் என்ற கொடிய கொலைக்கருவியை, இன்னும் எத்தனை குழந்தைகளின் மரணத்திற்கு பிறகு கீழே போடுவீர்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X