பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்.....

Added : செப் 15, 2020
Share
Advertisement

புயல் பாதுகாப்பு மையம் ஆய்வு

மாமல்லபுரம்: வடகிழக்கு பருவமழை காலத்தில், வங்க கடலில், காற்றழுத்த தாழ்வு, புயல் என உருவாகி, கனமழை பெய்யும். மீனவ பகுதியினர், பாதிக்காமல் தவிர்க்க, அவர்களை, வருவாய்த் துறையினர், புயல் பாதுகாப்பு மையங்கள், சமூகநலக் கூடங்கள், பள்ளிகளில் தங்க வைப்பர்.செங்கல்பட்டு மாவட்டத்தில், திருக்கழுக்குன்றம், செய்யூர், திருப்போரூர் தாலுகாக்களில், புயல் பாதுகாப்பு மையம், சமூக நலக் கூடங்களில், குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் உள்ளதா என்றும், தேவைப்படும் வசதிகள் குறித்தும், வருவாய்த் துறையினர், தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

கடலுாரில் மின் சப்ளை பாதிப்பு

கூவத்துார்: செங்கல்பட்டு மாவட்டம், கூவத்துார் அடுத்த கடலுார், வெங்காட்டுத் தெரு பகுதியில், 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி, மின்தட மின் கம்பங்கள், பல நாட்களுக்கு முன் விழுந்து, மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது.கூவத்துார், மின்வாரிய நிர்வாகம், மாற்று கம்பங்கள் அமைத்து, மின்தடத்தை சீரமைக்காமல், தற்காலிக இணைப்பு வழங்கியது. இந்த இணைப்பு, மிகவும் தாழ்வழுத்தத்தில் அமைந்து, வீட்டு மின்சாதனங்கள், விவசாய மோட்டார் இயங்காமல், இப்பகுதியினர் பாதிக்கப்படுகின்றனர். மின் வினியோகத்தை சீரமைக்க, வலியுறுத்துகின்றனர்

.ஊட்டச்சத்து மாத விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஊரகம், வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், போஷான் அபியான் திட்டத்தில், காஞ்சிபுரம் அடுத்த கம்பராஜபுரம் அங்கன்வாடி மையத்தில், ஊட்டச்சத்து மாத விழா சமூக இடைவெளியுடன் நேற்று நடந்தது.இதில், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலுாட்டும் பெண்கள் மற்றும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பயன்பெறும் விதமாக, அவர்களின் உடல் நலம் பற்றிய ஆலோசனை, யோகா பயிற்சி, தோட்டம் அமைப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது

.பி.டி.ஓ., ஆபீசில் ஹோமம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் கால்நடை சந்தை கட்டடம் அருகே, 2.80 கோடி ரூபாய் செலவில், புதிய வட்டார வளர்ச்சி அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது. இதை, இம்மாதம், 11ம் தேதி, முதல்வர் இ.பி.எஸ்., காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இந்நிலையில், புதிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், சிவாச்சாரியர் முன்னிலையில், நேற்று முன்தினம், கணபதி ஹோமம் நடந்தது. இதில், ஊரக வளர்ச்சி பொறியாளர் கவிதா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாணவர்களுக்கு முட்டை வழங்கல்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த எல்.எண்டத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில், சத்துணவு திட்டத்தில், 225 மாணவ - மாணவியர் பயனடைகின்றனர். ஒவ்வொருவருக்கும், 10 முட்டையை, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் பக்காளி தலைமையாசிரியர் மணிவண்ணன் ஆகியோர் நேற்று வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X