போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி| Dinamalar

போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

Updated : செப் 16, 2020 | Added : செப் 15, 2020
Share
லன்காஸ்டர்: அமெரிக்காவில், பென்சில்வேனியா மாகாணம் லங்காஸ்டர் நகரில், ஒரு போலீஸ் அதிகாரி, கத்தியால் குத்த வந்த நபரிடம் இருந்து தப்பிக்க, துப்பாக்கியால் சுட்டார். இதில், முனோஸ் என்ற அந்த இளைஞர் உயிரிழந்தார். அவர் சிறிது மனநலம் பாதித்தவர் என்பதும், ஏற்கனவே, நான்கு பேரை கத்தியால் குத்திய வழக்குகள் அவர் மீது உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. எனினும், துப்பாக்கிச் சூட்டை

லன்காஸ்டர்: அமெரிக்காவில், பென்சில்வேனியா மாகாணம் லங்காஸ்டர் நகரில், ஒரு போலீஸ் அதிகாரி, கத்தியால் குத்த வந்த நபரிடம் இருந்து தப்பிக்க, துப்பாக்கியால் சுட்டார். இதில், முனோஸ் என்ற அந்த இளைஞர் உயிரிழந்தார். அவர் சிறிது மனநலம் பாதித்தவர் என்பதும், ஏற்கனவே, நான்கு பேரை கத்தியால் குத்திய வழக்குகள் அவர் மீது உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. எனினும், துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ஆயிரக்கணக்கானோர், காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸ் அதிகாரி விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டதால், பதற்றம் தணிந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X