சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஐகோர்ட் வக்கீல் மீது திருவல்லிக்கேணியில் தாக்கு

Added : செப் 15, 2020
Share
Advertisement

திருவல்லிக்கேணி : திருவல்லிக்கேணியில், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தியோரை, போலீசார் தேடி வருகின்றனர்.

ராயப்பேட்டை, செல்ல பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன், 38; உயர் நீதிமன்ற வழக்கறிஞர். நேற்று முன்தினம் இரவு, எல்லீஸ் சாலையில் உள்ள, தனியார் 'பார்' ஒன்றிற்கு சென்றுள்ளார்.அங்கு, அவருக்கும், பாரில் வந்திருந்த கார்த்திக் என்பவருக்கும் இடையே, வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக், அருகே இருந்த காலி மதுபாட்டிலை எடுத்து, கண்ணனின் கையில் பலமாக தாக்கியுள்ளார்.

அப்போது, கார்த்திக்குடன் சேர்ந்து, அவரது நண்பர்களும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கண்ணன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.இது குறித்து விசாரிக்கும் திருவல்லிக்கேணி போலீசார், கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X