சம்பவம் செய்தி

தமிழ்நாடு

70 லோடு கலப்பட மணல் அனகாபுத்துாரில் பறிமுதல்

Added : செப் 15, 2020
Share
Advertisement
 70 லோடு கலப்பட மணல்  அனகாபுத்துாரில் பறிமுதல்

அனகாபுத்துார் : அனகாபுத்துாரில், தனியார் இடத்தில், விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 70 லோடு கலப்பட மணலை, வருவாய் துறையினர் பறிமுதல் செய்துஉள்ளனர்.

பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்துார், காமராஜபுரத்தில், தனியாருக்கு சொந்தமான இடத்தில், கலப்பட மணல் பதுக்கி வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், சம்மந்தப்பட்ட இடத்தை, 12ம் தேதி ஆய்வு செய்தனர். அப்போது, 70 லோடு கலப்பட மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

மேலும், அருகேயுள்ள அடையாறு ஆற்றில் இருந்து, கழிவு மணலை எடுத்து வந்து, ஆற்று மணலுடன் கலப்படம் செய்து, ஒரு யூனிட் மணல், 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.மேலும், அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, மணலுக்கு யாரும் உரிமை கொண்டாடவில்லை. அது யாருடையது என்பதும் தெரியவில்லை. இதையடுத்து, மணலை பறிமுதல் செய்த வருவாய் துறையினர், அவற்றை, பொதுப்பணித் துறையிடம் ஒப்படைத்தனர்.

அவர்கள், மணலை லாரி மூலம் எடுத்து, படப்பை பாசனப்பிரிவு அலுவலகத்தில் சேமித்து வைத்துள்ளனர். மணலுக்கு யாரும் உரிமை கேட்காததால், ஏலம் விட, பொதுப் பணித் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக, வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X