சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆவடி பெண்ணிடம் ரூ.1 லட்சம் 'ஆட்டை'

Added : செப் 15, 2020
Share
Advertisement
 ஆவடி பெண்ணிடம் ரூ.1 லட்சம் 'ஆட்டை'

ஆவடி : ஆவடி அருகே, வங்கியில் நிலவிய கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பெண்ணிடம், 1 லட்சம் ரூபாய் திருடி சென்ற மர்ம நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆவடி, காந்தி நகரைச் சேர்ந்தவர் காந்தம்மாள், 58; 'ஆவின்' பால் முகவர். மேலும், ஆவடி, புதிய ராணுவ சாலையில் உள்ள வங்கியில், தற்காலிக அலுவலக உதவியாளராக பணி புரிகிறார்.இவர், பால் வாடிக்கையாளர்களிடம் வசூலித்த, 95 ஆயிரம் ரூபாயை, நேற்று முன்தினம், ஒரு பையில் வைத்து, ஆவின் பூத்தில் செலுத்த சென்றபோது தாமதமானது.

இதனால், வேலைக்கு சென்று திரும்பும்போது, பணம் செலுத்தலாம் என நினைத்து, வங்கிக்கு சென்றார்.இதை நோட்டமிட்ட மர்ம நபர், வாடிக்கையாளர் போல் வங்கிக்குள் சென்று, கூட்ட நெரிசலை பயன்படுத்தி, காந்தம்மாள் பையை திருடிச் சென்றார்.பின், அதே சாலையில் உள்ள மற்றொரு வங்கியில், அந்த பையை வைத்து தப்பினார்.

இந்நிலையில், அந்த பையில் இருந்த மொபைல் போனில் காந்தம்மாள் தொடர்பு கொண்டபோது, பை அருகில் உள்ள வங்கியில் இருப்பது தெரிய வந்தது. அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, அதில் இருந்த, 95 ஆயிரம் ரூபாய் மாயமானது தெரிய வந்தது.இது குறித்த புகாரின் அடிப்படையில், ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X