பெண்கள் ஆணைய தேர்தல் சீனாவை வீழ்த்தியது இந்தியா

Added : செப் 15, 2020
Share
Advertisement

நியூயார்க்:ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் நிலைமை ஆணைய உறுப்பினர் தேர்தலில், சீனாவை வீழ்த்தி, இந்தியா வெற்றி பெற்றது.

சர்வதேச அளவில் பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்குஅதிகாரமளித்தல் போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம்அளிக்கும் வகையில், ஐ.நா., பெண்கள் நிலைமை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையம், ஐ.நா., வின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதற்கான உறுப்பினர்கள், பிராந்திய அடிப்படையில் தேர்வு செய்யப்படுவது வழக்கம்.

அடுத்த நான்கு ஆண்டு பதவிக் காலத்துக்கு, ஆசிய - பசிபிக் பிராந்தியம் சார்பில் இரண்டு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள, ஐ.நா., பொதுச் சபையில் நடந்தது.இந்தியா, ஆப்கானிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் போட்டியிட்டன. ஆப்கானிஸ்தான், 39 ஓட்டுகளும், இந்தியா, 38 ஓட்டுகளும் பெற்று வெற்றி பெற்றன.

ஐ.நா.,வின் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றான சீனாவுக்கு, 27 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. மொத்த ஓட்டுகளில், 50 சதவீத ஓட்டுகளை கூட சீனாவால் பெற முடிய வில்லை. ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி இதுகுறித்து கூறியதாவது:

பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு, இந்தியா, எல்லா தளங்களிலும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக இதை கருதுகிறோம். இந்த தேர்தலில் இந்தியா வெற்றி பெற உதவிய அனைத்து நாடுகளுக்கும் நன்றி.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X